நைஜீரியாவில் துப்பாக்கிதாரிகள் அட்டகாசம் : 48 பேர் உயிரிழப்பு!
வடக்கு நைஜீரியாவில் உள்ள மூன்று கிராமங்களில் துப்பாக்கிதாரிகள் நேற்று முன்னெடுத்த திடீர் தாக்குதலில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நைஜர் மாநிலத்தில் உள்ள குவாரா (Kwara) மற்றும் கட்சினா (Katsina) மாநிலங்களின் எல்லையில் உள்ள கிராமங்களில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் எரியூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நைஜர் மாநில காவல்துறை செய்தித் தொடர்பாளர் வாசியு அபியோடன் (Wasiu Abiodun), மேற்படி கிராமத்தில் நடந்த தாக்குதலை உறுதிப்படுத்தினார்.
“துங்கா-மகேரி கிராமத்திற்குள் நுழைந்த தாக்குதல்தாரிகள் பெரும்பாலானவர்களை கொன்றதுடன், வீடுகளை எரியூட்டி பலரை கடத்தி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நைஜீரியாவில் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்கள் பரவலாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





