இத்தாலி அணி அசத்தல் வெற்றி!
இத்தாலி Italy மற்றும் நேபாளம் Nepal அணிகளுக்கிடையிலான போட்டியில் இத்தாலி அணி 10 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
T 20 உலக்கிண்ண தொடரின் 17வது போட்டியில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் இன்று மோதின.
வான்கடே Wankhede மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இத்தாலி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதற்கமைய துடுப்பெடுத்தாட களமிறங்கிய நேபாளம் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.
124 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இத்தாலி அணி 12.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 124 வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.





