மடகஸ்காரில் கரையை கடந்த கெசானி புயல் – 09 பேர் பலி!
மடகஸ்காரில் கெசானி (Gezani ) புயல் நள்ளிரவில் கரையைக் கடந்துள்ள நிலையில், 09 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு துறைமுக நகரமான டோமாசினாவில் (Toamasina) உள்ள கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது ஒன்பது பேர் இறந்ததாகவும், சுமார் 19 பேர் காயமடைந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 195 கிமீ (121 மைல்) வேகத்தில் காற்று வீசியதுடன், பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நாட்டின் வடகிழக்கில் உள்ள பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.





