இந்தியா

17 ஆம் திகதி இந்தியா வருகிறார் பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் Emmanuel Macron மூன்று நாள் பயணமாக எதிர்வரும் 17 ஆம் திகதி இந்தியா வருகின்றார்.

டெல்லியில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு AI உச்சி மாநாட்டிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா மற்றும் பிரான்சுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் பேச்சு நடத்தவுள்ளார்.

இரு தரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், பிராந்திய, சர்வதேச விவகாரங்களில் இருதரப்பு நலன்கள் சார்ந்த விடயங்கள், இந்தோ-பசிபிக் ஒத்துழைப்பு குறித்தும் இரு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.

மும்பையில் நடைபெறும் ‘இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு – 2026’ நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடிModi , பிரான்ஸ் ஜனாதிபதி மேம்ரான் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!