உலகம் செய்தி

மூன்றாவது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகும் கனவில் ட்ரம்ப்

அமெரிக்காவில் மீண்டும் ஜனாதிபதியாக தான் போட்டியிடுவதற்கு விரும்புவதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாய ஆலோசகர் ஸ்டீவ் பானனின், ‘அரசியலமைப்புக்கு முரணாக மூன்றாவது முறையாகப் போட்டியிட வேண்டும்’ என்ற சமீபத்திய பரிந்துரை குறித்து, “ஏர் ஃபோர்ஸ் வன்” விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் அவரிடம் கேள்வி எழுப்பின.

கேள்விக்குப் பதிலளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்குச் சிறப்பாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

எனினும், மீண்டும் போட்டியிடுவது பற்றி “உண்மையில் யோசிக்கவில்லை” எனவும் அவர் கூறியுள்ளார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி