பிரான்ஸில் உலகப் புகழ் பெற்ற அருங்காட்சியகத்தில் கொள்ளை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் (Paris) உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) கொள்ளை சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து உலகப் புகழ்பெற்ற கலாச்சார மையம் இன்று மூடப்பட்டுள்ளது.
பிரெஞ்சு கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி ( Rachida Dati ) இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அருங்காட்சியகக் குழுக்கள் மற்றும் காவல்துறையினருடன் நான் சம்பவ இடத்தில் இருக்கிறேன் எனவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
திருட்டு சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை. உயர்ந்த பாதுகாப்புகளை கொண்ட அவ்விடத்தில் கொள்ளையர்கள் எவ்வாறு நுழைந்தார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் அருங்காட்சியகம் மீள எப்போது திறக்கப்படும் என்ற தகவலும் வெளியாகவில்லை.





