இலங்கை செய்தி

கொழும்பில் 5 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி – 7 பேர் கைது

நுகேகொடை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் 5 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக, சிறுவன் கல்வி பயின்று வந்த முன்பள்ளியின் உதவி அதிபர் உட்பட ஏழு பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி முற்பகல் மிரிஹான, ஸ்டான்லி மாவத்தையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதிவானது.

சிறுவன் உட்பட குழு ஒன்று, ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர் ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் ஹோட்டலின் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டிருந்தபோது, ​​சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.

பின்னர் சிறுவன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்து காணப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுவனின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றதுடன், களுபோவில வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி சடலம் தொடர்பாக திறந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

அதன்படி, இந்த சம்பவம் தொடர்பாக முன்பள்ளியின் உதவி அதிபர், விளையாட்டு ஒருங்கிணைப்பு அதிகாரி, பிள்ளைகளுக்கு பொறுப்பான இரண்டு ஆசிரியர்கள், முன்பள்ளி ஊழியர் ஒருவர் மற்றும் இரண்டு நீச்சல் பயிற்றுனர்கள் உட்பட 7 பேரை மிரிஹான பொலிஸார் கைது செய்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை