இலங்கை

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்ற வைத்தியர் அர்ச்சுனா – பொலிஸார் குவிப்பு

வடக்கு மருத்துவத் துறையில் இடம்பெற்றுவரும் பல்வேறு ஊழல்களை வெளிப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா கடந்த வாரம் விடுப்பில் (leave) கொழும்புக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் விடுப்பு காலம் முடிவடைந்து இன்றையதினம் மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு வருகை தந்துள்ளார்.

இதேவேளை, வைத்தியர் அர்ச்சுனா வரவேற்கும் முகமாகவும் அவருக்கு ஆதரவு வழங்கும் முகமாகவும் மக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஒன்று கூடியுள்ளனர்.

இந்நிலையில், அங்கு வந்த பொலிஸார் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு மக்களை விரட்டியடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் இந்த செயற்பாடு குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்

இந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலை முன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியரின் வருகையை வரவேற்க வந்த பொதுமக்களையும் கலைக்கும் முயற்சி இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்