சிட்னி தாக்குதல் – சந்தேக நபரின் அடையாளத்தை கண்டுபிடித்த பொலிஸார்
சிட்னி கிழக்கு பொன்டாய் சந்தியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று பிற்பகல் கத்திக்குத்துச் சம்பவத்தை மேற்கொண்ட நபரின் அடையாளம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 40 வயதான ஜோயல் கௌச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் தாக்குதலில் ஒன்பது மாதக் குழந்தையின் தாய் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சந்தேக நபர் கடந்த மாதம் குயின்ஸ்லாந்தில் இருந்து நியூ சவுத் வேல்ஸுக்கு குடிபெயர்ந்துள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் உதவி பொலிஸ் ஆணையாளர் அந்தோனி குக் தெரிவித்துள்ளார்.
அவரது குடும்பத்தினருடன் பேசியதாகவும், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கான காரணம் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் இது கொலையாளியின் மனநலத்துடன் தொடர்புடையதாக இருக்கும் என்று பொலிஸார் எதிர்பார்க்கிறார்கள்.
சந்தேக நபரைத் தவிர, நான்கு பெண்களும் ஒரு ஆணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றுமொரு பெண் பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.