பொழுதுபோக்கு

ஏப்ரலுக்கு வருகின்றது GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்… அப்டேட்களை அள்ளி வீசும் படக்குழு

தளபதி தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். இதுவரை இல்லாத அம்சத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சயின்ஸ் பிக்சன் மற்றும் ஆக்சன் கதையில் நடித்து வருகிறார் தளபதி.

கிளைமாக்ஸ் காட்சி கேரளாவில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் படமாக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது கோட் பட குழுவினர் இறுதி கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல உள்ளனர்.

தமிழக அரசியலில் கால் பதித்திருப்பதால் இவரது படங்கள் அதிக எதிர்பார்ப்புக்கு உள்ளாகி வருகிறது. தினம் தினம் புது புது அப்டேட்களை கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் விஜய்.

அதன்படி கோட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் 14 அன்று வெளியிடப் போவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

அது மட்டும் இன்றி தளபதியின் பிறந்த நாளான ஜூன் 22 இல் கோட் படத்தின் டீசர் வெளியாகும் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளனர்.

விரைவில் படப்பிடிப்பை முடித்து ஆகஸ்ட் 15க்குள் கோட் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும், தாமதிக்கும் பட்சத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர்.

மற்றொரு சிறப்பம்சமாக மங்காத்தா படத்தை போன்று கெத்தான தரமான தீம் மியூசிக் ஒன்று தளபதிக்கு போடப்பட்டுள்ளதாம். இதில் விஜய் ஒரு பாடல் ஒன்றும் பாடியுள்ளார்.

மேலும் திரிஷா ஒரு பாடலுக்கு நடனமும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!