ஐரோப்பா முக்கிய செய்திகள்

UKவில் மாணவர் விசாவை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு கடும் நடவடிக்கை!

விசா முறைகேடுகளில் ஈடுபடும் சர்வதேச மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இருந்து தடை  செய்யக்கூடிய புதிய சீர்திருத்தங்களை பிரித்தானிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

கற்றல் நோக்கத்தோடு பிரித்தானியாவிற்குள் நுழைபவர்கள் அந்த விசாக்களை துஷ்பிரயோகம் செய்வது இனங்காணப்பட்டதை தொடர்ந்தே  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது அந்த விசாக்கள் புகலிடம் கோருவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை கடுமையாக்க  தற்போது புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

புதிய விதிகளின்படி, பல்கலைக்கழகங்கள் சர்வதேச மாணவர்களுக்காகக் குறைந்தபட்சம் 90 சதவீதப் பாட நிறைவு விகிதத்தையும் 95 சதவீதப் பாடச் சேர்க்கை விகிதத்தையும் அடைய வேண்டும்.

2027 கோடைக்காலத்திலிருந்து, பல்கலைக்கழகங்களுக்கு ஒரு போக்குவரத்து விளக்கு மதிப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும். அதில் சிவப்புநிற குறியீட்டால் அடையாளப்படுத்தப்படுபவர்கள் அதிக கட்டுப்பாடுகளை எதிர்கொள்வார்கள்.

மேலும் 12 மாத கால செயல் திட்டத்திற்கு நிதியளிக்க வேண்டும். இதில் முன்னேற்றங்கள் செய்யப்படாவிட்டால், இறுதியில் தங்கள் நிதியுதவி உரிமைகளை இழக்கும் அபாயமும் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மார்ச் 2026 வரையிலான ஆண்டில், படிப்பு விசாக்களில் உள்ள 10,835 நபர்கள் இங்கிலாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். இருப்பினும், கடந்த ஆண்டில் மாணவர்களின் புகலிடக் கோரிக்கைகளில் 30 சதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புதிய திட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள குடியேற்றம் மற்றும் குடியுரிமைத் துறை அமைச்சர் மைக் டாப் , உண்மையான சர்வதேச மாணவர்கள் வரவேற்கப்பட்டாலும், விசா முறையானது ‘தஞ்சம் கோருவதற்கான ஒரு மறைமுக வழியாக’ தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்று கூறியுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!