செய்தி தமிழ்நாடு

8 கடைகளை உடைத்து பணம் திருட்டு சிசிடிவி ரெக்கார்டர்களையும் எடுத்துச் சென்ற கொள்ளையர்கள்

கோவை எட்டிமடை பகுதியில் உள்ள வணிக வளாகங்களில் மளிகை கடைகள், பேக்கரி,ஸ்டுடியோ,செல்போன் கடை, பேன்சி கடை என 8க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

கடையின் உரிமையாளர்கள் நேற்று இரவு பணி முடிந்த பின்பு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து இன்று காலை வழக்கம் போல் அதன் உரிமையாளர்கள் கடையை  திறக்க வந்துள்ளனர். அப்போது கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக க.க சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தடயங்களை சேகரித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது சிசிடிவியின் ரெக்கார்டர்களையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.இந்த திருட்டு சம்பவத்தில் 8 கடைகளின் பூட்டை உடைத்து 45ஆயிரம் பணம் மற்றும் உள்ளே இருந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி