ஐரோப்பா

பிரான்ஸில் களமிறக்கப்பட்ட 7000 இராணுவ வீரர்கள்!

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் படுகாயமடைந்ததுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து  நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்க பிரான்ஸ் 7,000 வீரர்களை திரட்டும் என்று ஜனாதிபதி அலுவலகம் இன்று (14.10) அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரின் உலகளாவிய பதட்டங்களின் சூழலில் பிரான்சை உலுக்கிய தாக்குதலுக்குப் பிறகு, சில பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் வடக்கு நகரமான அராஸில் உள்ள கம்பெட்டா-கார்னோட் பள்ளிக்கு திரும்பினர்.

இந்த சம்பத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டு உளவுத்துறையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில்,  பிரெஞ்சு அரசாங்கம் தேசிய அச்சுறுத்தல் எச்சரிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வரும் திங்கட்கிழமை வரை 7000 பாதுகாப்பு படை வீரர்களை ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்