விளையாட்டு

3 கோடியுடன் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற புனேரி பால்டன்

10-வது புரோ கபடி லீக் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின.

முதலாவது அரையிறுதியில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மற்றொரு அரையிறுதியில் அரியானா ஸ்டீலர்ஸ் அணி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை சாய்த்து முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், நேற்று நடந்த இறுதிப்போட்டியில் புனேரி பால்டன், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடந்த இந்தப் போட்டியில் புனேரி பால்டன் அணி 28-25 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதன்மூலம் முதல் முறையாக புனேரி பால்டன் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

முதல் முறையாக கோப்பையை வென்ற புனே அணிக்கு ரூ.3 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.

2வது இடத்தை பிடித்த அரியானா அணிக்கு ரூ.1.8 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டது.

KP

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ