இலங்கை

இலங்கை : பேலியகொடவில் 25 பெண்கள் அதிரடியாக கைது : தொடர்பில் இருந்தவர்களுக்கும் சிக்கல்!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரால் 25 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்கள் கோனோரியா, ஹெர்பெஸ் போன்ற சமூக நோய் தாக்கங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்திய பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்காரணமாக அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அவதானமாக இருக்குமாறும், மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தை, பட்டிய சந்தி, வெதமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் வைத்து குறித்த பெண்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் பாவனைக்காக தவறான தொழிலில் ஈடுபடும் பெண்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்