செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு பிரவேசிக்க 24 மணி நேர பயணிகள் பேருந்து சேவை ஆரம்பம்

நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து கொழும்பு வரை தனியார் பேருந்து சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு பிரவேசிக்கும் மக்களுக்காக பொதுப் போக்குவரத்து சேவையொன்றின் அத்தியாவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதன் ஆரம்ப நடவடிக்கையாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் அவெரிவத்தை பேருந்து தரிப்பு நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் இந்த பேருந்து நேற்று முதல் விமான நிலையத்திலிருந்து ஆரம்பிக்கின்றது.

இந்த பேருந்து சேவையை 24×7 மணி நேரச் சேவையாக நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது தனியார் துறையின் பேருந்து ஒன்றைச் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் பயணப் பொதிகளைக் கொண்டு வரும் வசதிகளுடன் பேருந்து சேவை ஒன்றை, இந்த சேவைக்கு ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.

இந்த சேவையை வழங்கும் பேருந்து வண்டிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மக்கள் அபிமான சேவையை வழங்குவதற்காக முறையான பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் இச்சேவையில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி