ஐரோப்பா

ரஷ்யாவின் அதிபராக புட்டின் மீண்டும் பதவியேற்றார்!

  • May 7, 2024
  • 0 Comments

ஐந்தாவது முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்றுள்ள விளாடிமிர் புடின், உக்ரைனில் எங்கள் தாய்நாட்டிற்காக போராடும் வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தங்கம் பூசப்பட்ட கிராண்ட் கிரெம்ளின் அரண்மனையில் நடந்த விழாவில்,  புடின் ரஷ்ய அரசியலமைப்பின் மீது கையை வைத்து,  அதைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். புட்டின் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.  

ஐரோப்பா

புட்டினை சிறையில் அடைக்க வேண்டும் : நெதர்லாந்தில் ஒன்றுக்கூடிய ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தல்!

  • May 7, 2024
  • 0 Comments

நெதர்லாந்தில் உள்ள ஹேக் அமைதி அரண்மனைக்கு வெளியே அதிபர் விளாடிமிர் புடின் பதவியேற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து டஜன் கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜேர்மனியில் இருந்து பயணித்த பலர், ஒரு மாபெரும் கார்னிவல் பவனியை ஏந்திச் சென்றுள்ளனர். அதில் ரஷ்ய தலைவரின் கைகளில் இரத்தம் தோய்ந்த ஒரு கேலிச்சித்திரம் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. போராட்டகாரர்கள் புடினை சிறையில் அடைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ரஷ்ய கைதிகளை ஆதரிக்கும் பெர்லினை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் […]

இலங்கை

இலங்கை : நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார தொழிற்சங்கங்கள்!

  • May 7, 2024
  • 0 Comments

எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி முதல் மீண்டும் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொருளாதார நீதியை நிறைவேற்றாதது தொடர்பாக, 72 தொழிற்சங்கங்களின் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு 4 மாதங்களுக்கு முன்னர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட தொழிநுட்ப அறிக்கையின் படி, கொடுப்பனவுகளை வழங்குவதாக எழுத்து மூலம் வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் அது ஏப்ரல் மாதம் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இதுவரையில் அந்த வாக்குறுதி உரிய முறையில் நிறைவேற்றப்படாததால் […]

இந்தியா ஐரோப்பா

ஸ்காட்லாந்து முதல் மந்திரி பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக பதவி விலகினார் ஹம்சா யூசப்!

  • May 7, 2024
  • 0 Comments

ஸ்காட்லாந்து முதல் மந்திரி பதவியில் இருந்து ஹம்சா யூசப் இன்று (07.05) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.  யூசப் தனது ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து புதிய முதல் மந்திரியை தெரிவு செய்ய வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் ஸ்வின்னி மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். SNP க்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் எதிர்க்கட்சிகள் அவரைத் தடுக்க முற்படாத நிலையில், இன்று ஹோலிரூட்டில் அவர் முதல்-மந்திரி ஆவதற்கு MSPகள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை

யாழ்ப்பாணம் – “நானே அம்மாவை கொலை செய்தேன் ”; 16 வயது சிறுவனின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

  • May 7, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் (வயது 37) எனும் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் அவர் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார் என தெரியவந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (03) அன்று வீட்டில் தாயும் 16 வயதுடைய மகனும் மட்டுமே இருந்துள்ள நிலையில் மறுநாள் பெண் உயிரிழந்து சடலமாக […]

ஐரோப்பா

பிரித்தானியா – வேல்ஸில் சிவப்பு அறிவித்தலை வெளியிட்ட 03 முக்கிய மருத்துவமனைகள்!

  • May 7, 2024
  • 0 Comments

வேல்ஸில் மூன்று மருத்துவமனைகள் சிவப்பு அறித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளன. இதன்படி Llantrisant இல் உள்ள Royal Glamorgan மருத்துவமனை, Merthyr Tydfil இல் உள்ள பிரின்ஸ் சார்லஸ் மருத்துவமனை மற்றும் Princess of Wales Hospital in Bridgend ஆகிய மருத்துவமனைகள் இந்த சிவப்பு அறித்தலை வெளியிட்டுள்ளன. குறித்த மருத்துவமனைகளில் அவசர சேவை பிரிவு, விபத்து பிரிவு ஆகியன துரிதமாக செயற்படுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக […]

ஐரோப்பா

டேவிட் கேமரூன் வெளியிட்ட கருத்து ; பிரித்தானியாவுக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுத்த ரஷ்யா

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானிய ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன் ரஷ்யா மீது தாக்குதல் முன்னெடுத்தால், பிரித்தானியா மீது தாக்குதல் உறுதி என ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது. ரஷ்யாவை தாக்குவதற்கு பிரித்தானிய ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைனுக்கு உரிமை உண்டு என்று கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன் கூறிய நிலையிலேயே ரஷ்யா பதிலடி உறுதி என்று மிரட்டல் விடுத்துள்ளது.அத்துடன் இந்த விவகாரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் பொருட்டு பிரித்தானிய தூதர் நைஜல் கேசியை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. ஆனால் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரயில் ஊழியர்கள்!

  • May 7, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் ரயில் சாரதிகள் இன்று (07.05) புதிய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஊதியம் தொடர்பான நீண்டகால சர்ச்சையின் ஒரு பகுதியாக இந்த வேலை நிறுத்த போராட்டத்தை ஊழியர்கள் முன்னெடுத்துள்ளனர். 16 ரயில் நிறுவனங்களில் உள்ள Aslef தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று முதல் வியாழன் வரை வெவ்வேறு நாட்களில் வெளிநடப்பு செய்வார்கள். கூடுதலாக, அனைத்து உறுப்பினர்களும் சனிக்கிழமை வரை கூடுதல் நேரம் வேலை செய்ய மறுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

இணையத்தில் வைரலாகும் டெஸ்லா நிறுவனத்தின் மின்னஞ்சல் செய்தி!

  • May 7, 2024
  • 0 Comments

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலோன் மஸ்க்கின் நிறுவனமான டெஸ்லாவில் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பல ஊழியர்கள் தங்களுடைய அனுபவங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஊழியர் ஒருவர் வெளியிட்டுள்ள வேலைநிறுத்த கடிதம் வைரலாகி வருகின்றது. பணிநீக்கம் செய்யப்பட்ட பல ஊழியர்களின் உள்நுழைவுகள் முடக்கப்பட்டுள்ளன.  நிறுவன அலுவலகங்களுக்கான அணுகல் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே மின்னஞ்சல்கள் பணி மின்னஞ்சல்களுக்குப் பதிலாக தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.  

பொழுதுபோக்கு

ஜோதிகா மகளைத் தொடர்ந்து தனுஷ் மகன் யாத்ரா குறித்து வெளியான செய்தி

  • May 7, 2024
  • 0 Comments

நடிகர் தனுஷின் மகன் யாத்ரா 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி இருந்தார். இந்த முடிவுகள் திங்கட் கிழமையான நேற்று வெளியானது. இதில் யாத்ரா நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ரஜினியின் மகளான ஐஸ்வர்யா தன்னைவிட இரண்டு வயது குறைந்தவரான தனுஷை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்த நிலையில், திடீரென இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். மகன்களுக்காக இருவரும் […]

error: Content is protected !!