ஐரோப்பா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசியின் தற்போதைய நிலை

  • May 11, 2024
  • 0 Comments

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி கேட் மிடல்டன் நலமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. தமது மனைவி இளவரசி கேட் மிடல்டன் நலமாக இருப்பதாக இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார். புற்றுநோய்க்காக இளவரசி கேட் சிகிச்சை பெறுவதாகச் செய்தி வெளியான பிறகு அரச குடும்பத்தில் இருந்து மிக அரிதாக வெளியிடப்பட்டுள்ள கருத்து அது. வேல்ஸ் இளவரசி கேட் தமக்குப் புற்றுநோய் இருப்பதாகக் கடந்த மார்ச் 22ஆம் திகதி அறிவித்தார். சிகிக்சை பெற்று வருவதாகக் காணொளிச் செய்தியில் அவர் சொன்னார். மன்னர் சார்ல்ஸுக்குப் […]

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

யாழ்ப்பாணத்து ராதையாக மாறிய ஜனனி… விஜய் பாடலுக்கு என்ன ஒரு குத்து

  • May 11, 2024
  • 0 Comments

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக இலங்கையை சேர்ந்த ஜனனி என்பவர் கலந்து கொண்ட நிலையில், தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகின்றார். முதல் படமே விஜய்யுடன் இணைந்து லியோவில் அசத்தியிருந்தார். அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். அந்த வகையில் தனது நடிப்பையும், மாடலிங்கையும் தொடர்ந்து வருகின்றார் ஜனனி. இப்படி இருக்க அண்மையில் ராதை போல் ஆடையணிந்து கொண்டு, விஜய்யின் பாடலுக்கு நடனமாடும் காணொளி வெளியாகி உள்ளது.

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

கோடி கணக்கான WhatsApp கணக்குகள் முடக்கம்

  • May 11, 2024
  • 0 Comments

உலக அளவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான WhatsApp கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அதற்கான காரணம் என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. உலகிலேயே அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான WhatsApp, தங்களின் பயனர்களுக்காக பல புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிட்ட வண்ணம் உள்ளது. இதுதவிர WhatsApp நிறுவனம், ஒவ்வொரு நாட்டின் அரசாங்க விதிமுறைகளின் படி சில விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன. அந்த விதிகளை மீறும் வாடிக்கையாளர்களின் கணக்குகள்தான் […]

ஆசியா

தாய்லாந்தை உலுக்கிய வெப்பம் – 61 பேர் மரணம்

  • May 11, 2024
  • 0 Comments

தாய்லாந்தை உலுக்கிய கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு 37 மரணங்கள் ஏற்பட்டன. அந்நாட்டின் சுகாதார அமைச்சு விவரம் தந்தது. கடந்த சில வாரங்களாகவே தாய்லந்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. கிட்டத்தட்ட அன்றாடம் அதிகாரிகள் வானிலையைப் பற்றி எச்சரிக்கை விடுக்கின்றனர். தாய்லந்தின் வட கிழக்குப் பகுதியில்தான் ஆக அதிகமான மரணங்கள் பதிவாகின. அங்கு விவசாயம் முக்கியத் தொழிலாகும். மனிதர்களால் ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் நீண்டகாலம் நீடிக்கக்கூடிய கடுமையான […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் 33 அகதிகளுடன் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல் – மறைக்கப்படும் தகவல்கள்

  • May 11, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் சட்டவிரோத அகதிகள் என சந்தேகிக்கப்படும் 33 பேரை ஏற்றிச் சென்ற படகு வைத்து கைது செய்யப்பட்டுள்ளது. வியாழன் அதிகாலை மோசமான வானிலைக்கு மத்தியில் பயணித்த புலம்பெயர்ந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த கப்பலில் வந்த 33 பேர் கொண்ட குழு முதலில் கிறிஸ்மஸ் தீவிற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பின்னர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த புலம்பெயர்ந்தவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து கடலோர காவல்படை எந்த தகவலையும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சீனா – அரசாங்க கட்டமைப்புகள் ஆபத்தில்

  • May 11, 2024
  • 0 Comments

பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சில் குறிப்பிடத்தக்க இணைய பாதுகாப்பு மீறல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த ஊடக அறிக்கைகளுக்கமைய, பிரித்தானியா அரசாங்கம் முக்கியமான அரசாங்க அமைப்புகளின் அபாயத்தில் கவனம் செலுத்தியுள்ளது. பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவு உள்கட்டமைப்பில் ஹேக்கர்கள் வெற்றிகரமாக ஊடுருவியுள்ளனர் மற்றும் அதிகாரிகள் இது தொடர்பாக அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். ஆசிய நாட்டில் அரச அனுசரணை பெற்ற ஹேக்கர்கள் குழுவினால் இந்த இணையத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அடிப்படை சந்தேகங்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. […]

ஆசியா செய்தி

சிங்கப்பூரில் ஆண் – பெண்கள் இடையேயான வருமானத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

  • May 11, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் ஆண் – பெண்கள் இடையேயான வருமானத்தின் இடைவெளியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கைக்குப் பிறகு பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றிக் கூறும் முதல் அறிக்கை இதுவாகும். வெள்ளை அறிக்கை 25 செயல் திட்டங்களை முன்வைத்தது. வேலையிடங்களில் பெண்களுக்குச் சமமான வாய்ப்புகள் வழங்கப்படுவது அவற்றில் ஒன்று. பல துறைகளிலும் பெண்கள் தலைமைத்துவப் பொறுப்புக்கு வரும் விகிதம் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை – பறிபோகும் நகைகள்

  • May 11, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் வாழும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாட்டவர்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குடும்ப தங்கத்தை குறிவைத்து பல கொள்ளை சம்பவங்கள் நடப்பதை அடுத்து, தெற்காசிய சமூகங்கள் விழிப்புடன் இருக்குமாறு பிரித்தானிய பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஈஸ்ட்லீ மற்றும் சவுத்தாம்ப்டனில் 19 தங்க கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ள நிலையில் ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனது படுக்கையறையில் இரண்டு ஆண்களால் அலமாரி வழியாக சென்று தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும், 20,000 பவுண்ட் மதிப்புள்ள தங்க நகைகள் திருடப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

இத்தாலி, ஜேர்மன் கடவுச்சீட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

  • May 11, 2024
  • 0 Comments

இலங்கை வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். போலி இத்தாலிய மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட பல ஆவணங்களுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். விமானப் பயணச்சீட்டு நிறுவனத்தை நடத்தி வரும் சந்தேக நபர் துபாய் மாநிலத்திற்குச் சென்று ஜவுளி மற்றும் காலணிகளை கொண்டு வந்து இந்த நாட்டில் விற்பனை செய்யும் தொழிலிலும் […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

நிலவில் ரயில் நிலையம் – நாசா அதிரடித் திட்டம்

  • May 10, 2024
  • 0 Comments

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல் வடிவம் கொடுக்க முயற்சியில் நாசா தற்போது இறங்கியுள்ளது. இந்த ரயில் பூமியில் நாம் பயன்படுத்தி வரும் ரயிலிலிருந்து சற்று மாறுபடுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம். நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைப்பது தான் நாசாவின் திட்டம். தானியங்கி முறையில் செயற்படும் வகையிலும், சுமைகளைக் கடத்திச் செல்லும் வகையிலும் […]

error: Content is protected !!