தமிழ்நாடு

தமிழகத்தில் அதிர்ச்சி .. விளையாட்டால் பறிபோன 9 வயது சிறுமியின் உயிர்!

  • May 12, 2024
  • 0 Comments

மின் விசிறியில் சேலையை போட்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி எதிர்பாராத விதமாக கழுத்து இறுகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் ஹன்சிகா( 9). நந்திவரம் அரசு ஆரம்ப பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மதியம் ஹன்சிகா வீட்டில் தனது தங்கையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். இப்போது திடீரென கூச்சலிட்டு அழும் […]

ஆசியா

மலேசியாவின் ”பேய் நகரம்” : அழகிய கட்டடத்தின் பின்னணியில் உள்ள சோகம்!

  • May 12, 2024
  • 0 Comments

மலேசியாவில் சீனர்களால் உருவாக்கப்பட்ட ஆடம்பரமான வானளாவிய கட்டிடங்கள் தற்போது தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், பேய் நகரங்கள் போல் காட்சியளிக்கிறது. உண்மையில் குறித்த கட்டடங்கள் வெளிநாட்டில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களை இலக்காக கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், அதாவது கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படுகிறது. சிங்கப்பூரில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 100  பில்லியன் டொலர்களை செலவிட்டு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முதல் முறை நீங்கள் இந்த கட்டடத்தை பார்க்கும்போது வானலாவிய உயர்ந்த கட்டடங்கள்போல் தோன்றாலாம். ஆனால் […]

ஐரோப்பா

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பாலியல் உறவில் ஈடுபட்ட ஜோடிகளால் பதற்றம்!

  • May 12, 2024
  • 0 Comments

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் இரு பயணிகள் பாலியல் உறவில் ஈடுபட்டு அங்கிருந்த பயணிகள் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளனர். லண்டன் ஹீத்ரோவிலிருந்து டப்ளினுக்கு பயணத்தை மேற்கொண்ட விமானத்தில் இந்த அநாகரிகமான சம்பவம் பதிவாகியுள்ளது. விமானத்தில் ஏராளமான குழந்தைகள் இருந்ததாகவும் குறித்த இருவரும் அநாகரிக்கமாக நடந்துகொண்ட சமயத்தில் குழந்தையொன்று அவர்களை கடந்துச் சென்றதாகவும் பயணி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள விமான நிறுவனம், விமானத்தில் உள்ள ஏதேனும் சிக்கல்கள் குறித்து ஊழியர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. ஆனால் […]

பொழுதுபோக்கு

மற்றுமொரு அதிர்ச்சி செய்தி – ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி விவாகரத்து?

  • May 12, 2024
  • 0 Comments

பத்தாம் ஆண்டு திருமண நாளை ஜி.வி பிரகாஷ் மற்றும் சைந்தவி மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்தை பெற முடிவு செய்து இருப்பதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்றோ அல்லது நாளையோ வெளியிடுவார்கள் என்று சொல்லப்படுகிறது. ஜிவி மற்றும் சைந்தவி இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். பள்ளிக் காலத்திலேயே காதலித்து வந்த […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரிப்பு – கட்டுப்படுத்த போராடும் அரசாங்கம்!

  • May 12, 2024
  • 0 Comments

பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் துப்பாக்கி வைத்திருப்பதற்கான கடுமையான சட்ட விதிகளை கொண்டுவரும்போது வாள்வெட்டு தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வகையான ஆயுதங்கள் மலிவாகவும், எளிதாகவும் கிடைக்கும் என்பதால் பலர் குழந்தைகள் உள்பட பலர் இதில் சிக்கிக்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கத்தி குத்து தாக்குதல்களால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இவை மக்களை பீதியடையவைத்துள்ளதுடன், எதிர்காலம் பற்றிய கேள்விகளையும் எழுப்பியுள்ளது. லண்டனில், இத்தகைய குற்றங்கள் 20% உயர்ந்துள்ளதாக […]

ஆசியா

மலேசியா – கோலா குபு பாரு இடைத்தேர்தலில் பிரதமர் அன்வார் கூட்டணி வெற்றி

  • May 12, 2024
  • 0 Comments

சிலாங்கூரின் கோலா குபு பாரு தொகுதிக்கு மே 11ம் திகதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக் கட்சியான ஜனநாயக செயல் கட்சியின் (டிஏபி) வேட்பாளர் பாங் சோக் தாவ், 14,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். செல்லுபடியாகும் வாக்குகளில் இது கிட்டத்தட்ட 57.2 சதவீதம் எனத் தெரிவிக்கப்பட்டது. மலேசிய ஆளும் கூட்டணிக்கான ஆதரவு நிலவரத்தைக் காட்டுவதாக இந்த இடைத்தேர்தல் கருதப்பட்டது. கோலா குபு பாருவில் மூன்று தவணைக் […]

மத்திய கிழக்கு

அணு ஆயுதங்கள் தொடர்பில் இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்த எச்சரிக்கை… பதற்றத்தில் உலக நாடுகள்

  • May 12, 2024
  • 0 Comments

இஸ்ரேல்- ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், ஈரான் திடீரென அணு ஆயுதங்கள் குறித்து மிகப் பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் சில காலமாகவே பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. இஸ்ரேல்- ஈரான் இடையேயும் மோதல் அதிகரித்து வருகிறது. இரு நாடுகளும் சில வாரங்களுக்கு முன்பு மாறி மாறி தாக்கிக் கொண்டது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது. இதற்கிடையே அணு ஆயுதங்கள் தொடர்பாக இஸ்ரேலுக்கு ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை […]

ஆசியா

இந்தோனேசியாவில் சாரதியின் செயலால் நேர்ந்த விபரீதம் : 11 பேர் பலி!

  • May 12, 2024
  • 0 Comments

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். பட்டமளிப்பு விழாவிற்காக மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பஸ் பிரேக் போடாததால் பல கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 53 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பட்டமளிப்பு விழாவுக்காக பயணித்த மாணவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்து ஏற்படுவதற்கு […]

இலங்கை

இலங்கை – பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நான்கு வயது குழுந்தை பலி!

  • May 12, 2024
  • 0 Comments

மெதகம, ஈரியகஹமட பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து குழந்தையொன்று உயிரிழந்தது. ஈரியகஹமட கெதவின்ன பிரதேசத்தில் வசிக்கும் 04 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்தது. நேற்று (11) வீட்டுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் குழந்தை விழுந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெதகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐரோப்பா

ரஷ்யாவின் உள்ள எண்ணெய் ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்; மூவர் பேர் பலி!

  • May 12, 2024
  • 0 Comments

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் உக்ரைன்-ரஷ்யா போரில் இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. அந்தவகையில் ரஷ்யாவின் ரோவென்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள ஒரு எண்ணெய் ஆலை தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கள் போன்றவை சேதமடைந்தன. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். அந்த எண்ணெய் ஆலையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது. எனினும் அங்கு வேலை பார்த்த 3 தொழிலாளர்கள் […]

error: Content is protected !!