சிங்கப்பூரில் இந்தவாரம் 49000 டொலர் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 77பேர் கைது
திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடையில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினால் (CNB) மொத்தம் சுமார் 49,000 டொலர் பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதுடன் 77 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 45 கிராம் ஹெரோயின், 250 கிராம் மெத்தம்பெட்டமைன் அல்லது ஐஸ், 250 கிராம் கஞ்சா, 2 கிராம் கெட்டமைன், நான்கு எக்ஸ்டசி மாத்திரைகள் மற்றும் 27 எரிமின்-5 மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. பெடோக், சாங்கி, உட்லண்ட்ஸ் மற்றும் யிஷுன் […]













