பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க ஸ்டாமர் அழைப்பு!
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டங்களுக்குத் தடை விதிக்க பிரித்தானிய பிரதமர் செர் கெய்ர் ஸ்டாமர் அழைப்பு விடுத்துள்ளார்.
பிரான்சில் காணப்படுவது போல, பேரணிகளைத் தடுப்பது யூத-எதிர்ப்பை எதிர்த்துப் போராடுவதற்குப் பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் மீண்டும் நடைபெறும் பேரணிகள் யூத சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் குறிப்பிட்ட அவர், யூத-எதிர்ப்பைச் சமாளிக்க ‘சமூகம் தழுவிய பதில் நடவடிக்கை’ தேவை என்றும் வலியுறுத்தினார்.
கோல்டர்ஸ் கிரீனில் இரண்டு யூதர்கள் கத்தியால் குத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் ‘கடுமையானதாக உயர்த்தப்பட்டது.
இந்த நடவடிக்கையானது அடுத்த 06 மாதங்களில் தாக்குதல் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
அதேநேரம் இஸ்லாமிய மற்றும் தீவிர வலதுசாரி பயங்கரவாதம் ஆகிய இரண்டும் அதிகரித்துள்ளதாக MI5 அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே ஸ்டாமரின் மேற்படி கருத்துக்கள் வந்துள்ளன.





