தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராகும் ரஷ்யா!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தந்திரோபாய அணு ஆயுதங்களை ஏவத் தயாராக இருப்பதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
உக்ரைனிய இராணுவத் தளபதி ரோமன் கோஸ்டென்கோ (Roman Kostenko) இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த மோதலில் ரஷ்யா தோல்வியை சந்திப்பதாக உணர்ந்தால், அது அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல கிலோடன்கள் முதல் பல பத்து கிலோடன்கள் வரையிலான ஆற்றல் கொண்ட தந்திரோபாய அணு ஆயுதங்களை ரஷ்யா ஏவக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத் தளங்கள், படைக் கூட்டங்கள், உள்கட்டமைப்புகள், கட்டளை மையங்கள் மற்றும் முக்கிய நகரங்கள் ஆகியவை இதன் சாத்தியமான இலக்குகளாக இருக்கலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதாக தி மிரர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.





