இலங்கை செய்தி

இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் பரவும் அபாயம்

இன்புளுவன்சா காய்ச்சல் மீண்டும் நாடு முழுவதும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

கர்ப்பிணிப் பெண்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் சுவாச அமைப்பு தொடர்பான இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

அதிக காய்ச்சல், தசைவலி, மூக்கில் நீர் வடிதல், தொண்டை புண் மற்றும் சளி போன்றவை இந்நிலையின் அடிப்படை அறிகுறிகளாகும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் பிரியங்கர ஜயவர்தன கூறுகிறார்.

இதேவேளை, காலி மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த வருடத்தின் கடந்த மூன்றரை மாதங்களில் எலிக்காய்ச்சலினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக காலி மாவட்ட தொற்று நோய் நிபுணர் எரந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் குறித்த இந்த மூன்று மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் எலிக்காய்ச்சலால் 15 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதோடு, 127 பேருக்கு குறித்த நோய் தொற்று பதிவாகியுள்ளதாகவும் இந்த 15 உயிரிழப்புகளில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவரும் உள்ளடங்குவதாக வைத்தியர் தெரிவித்தார்.

 

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை