இலங்கை செய்தி

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

எதிர்வரும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு காலப்பகுதியில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த வாரம் விலை குறைக்கப்பட்ட 12 அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக, மேலும் 03 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

நாளை (07) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இந்த விலைச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இதன்படி, டின்மீன் (425கிராம்) புதிய விலை 490 ரூபாவாகவும், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை 97 ரூபாவாகவும், ஒரு கிலோ ரொட்டி மாவின் புதிய விலை 225 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 500 இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களுக்கு விதிவிலக்கான விலை குறைப்பு மற்றும் தள்ளுபடி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லங்கா சதொச மக்களுக்கு தெரிவிக்கின்றது.

hinduja

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை