செய்தி

தைவானுக்கு புயல் எச்சரிக்கை – 8300 மக்கள் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றம்!

தைவானில் புயல் எச்சரிக்கைகள் அமுலில் உள்ள நிலையில் கடலோர பகுதிகளில் வசிக்கும் 8,300 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸைத் தாக்கிய ஃபங்-வோங் (Fung-wong) சூறாவளியால் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த புயலானது தைவானை நோக்கி நகர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் தைவானை நெருங்கும்போது மணிக்கு 65 கிமீ (40 மைல்) வேகத்தில் காற்று வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தைவானிய அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி