ஐரோப்பா

பிரான்ஸில் பாடசாலை விட்டு வீடு திரும்பிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

பிரான்ஸில் பாடசாலை விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த 14 வயதுச் சிறுவன் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை இச்சம்பவம் வால் து மார்ன் நகரில் இடம்பெற்றுள்ளது. மாலை 5.30 மணி அளவில் குறித்த சிறுவன் மின்சார ஸ்கூட்டர் (trottinette) ஒன்றில் பயணித்த நிலையில், கார் ஒன்றுடன் மோதுண்டுள்ளார்.

பாதசாரிகள் கடவையில் குறித்த சிறுவன் வீதியைக் கடக்க முற்பட்டபோது, Fiat 500 ரக கார் சிறுவனை மோதித்தள்ளியது.

தீயணைப்பு படையினர் விரைவாக செயற்பட்டபோதும் சிறுவனைக் காப்பாற்ற முடியாமல் போனது.

சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தினால் அதிர்ச்சிக்குள்ளான சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்