இலங்கை செய்தி

நிலக்கரி இறக்குமதி முறைகேடு குறித்து சி.ஐ.டியில் முறைப்பாடு!

  • April 11, 2026
  • 0 Comments

நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பில் விசாரணையை முன்னெடுக்குமாறுகோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் CID இன்று (11) முற்பகல் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலாளரினால் குறித்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளிலும் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு, 2009ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி இறக்குமதிகள் குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்குமாறு முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது. நிலக்கரி மோசடி தொடர்பிலேயே எரிசக்தி அமைச்சருக்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் […]

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் களமிறங்கியது அமெரிக்க தூதுக்குழு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானுடனான அமைதி பேச்சுக்காக அமெரிக்க பிரதிநிதிகள் குழு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வந்துள்ளனர். துணை ஜனாதிபதி JD Vance தலைமையிலான அமெரிக்க தூதுக்குழுவினரை, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர். பாகிஸ்தான் ராணுவ தளபதியும் விமான நிலையம் சென்றிருந்தார். அமெரிக்கத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பின் போது உலகளாவிய அமைதிக்கான அமெரிக்காவின் முயற்சியை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் பாராட்டியுள்ளார். ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்க ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் பிரதமருடன் ஈரான் தூதுக்குழு பேச்சு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானைச் சேர்ந்த உயர்மட்டக் குழுவினர் அமைதி பேச்சுகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவத் தளபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஈரான் தூதுக்குழுவினர் ஏற்கனவே சந்தித்துப் பேசியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இன்று பிற்பகல் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை நேரில் சந்தித்து ஈரானிய பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தவும் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கவும் இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. இச்சந்திப்புக்கு பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான அமைதி […]

உலகம் செய்தி

நேர்மையுடன் பேசுங்கள்: ஈரான், அமெரிக்காவிடம் ஐ.நா. வலியுறுத்து!

  • April 11, 2026
  • 0 Comments

நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் கலந்துரையாடலில் ஈடுபடுமாறு ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிடம் ஐ.நா. பொதுச்செயலாளர் António Guterres கோரிக்கை விடுத்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான அமைதி முயற்சியை அவர் வரவேற்றுள்ளார். மேற்படி இராஜதந்திர வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு நிலையான உடன்பாட்டை எட்ட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். பிராந்தியத்தில் மீண்டும் மோதல்கள் வெடிப்பதைத் தடுக்கவும், பதற்றத்தைத் தணிக்கவும் இஸ்லாமாபாத் கலந்துரையாடல் மிக முக்கியம் என ஐ.நா. செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த முக்கியமான இராஜதந்திர முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தனது […]

உலகம் செய்தி

மீண்டும் களமிறங்குகிறார் Kamala Harris!

  • April 11, 2026
  • 0 Comments

2028 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பில் கமலா ஹாரிஸ் Kamala Harris தீவிரமாக ஆலோசித்துவருகின்றார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியொன்றின்போதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார். 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்ப், கமலா ஹாரிஸ் ஆகியோருக்கிடையில் இரு முனை போட்டி நிலவியது.இதில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றார். இந்நிலையில் தற்போதைய அமெரிக்க அரசியல் சூழலையும் டிரம்ப் நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார் கமலா ஹாரிஸ். ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஈராண்டுகள் எஞ்சியுள்ள […]

இலங்கை செய்தி

தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை!

  • April 11, 2026
  • 0 Comments

தலைமன்னார் – இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இதனைச் சமர்ப்பித்தார். இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான தொப்புள்கொடி உறவையும், வரலாற்று ரீதியான தொடர்புகளையும் புதுப்பிக்கும் நோக்கில் இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து பிரேரணையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய அம்சங்களாவன:- இந்திய மற்றும் இலங்கைக்கிடையிலான இந்தப் படகுச் சேவையை மீள ஆரம்பிப்பதன் மூலம் இந்திய […]

விளையாட்டு

தோல்வி பொறிக்குள் இருந்து மீளுமா CSK?

  • April 11, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று (11) நடைபெறும் 17ஆவது லீக் ஆட்டத்தில் Chennai Super Kings மற்றும் Delhi Capitals ஆகிய அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். ஐ.பி.எல். தொடரில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை வெகுவிரைவில் திறக்கப்படும்: ட்ரம்பின் அறிவிப்பால் பரபரப்பு!

  • April 11, 2026
  • 0 Comments

ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் நீரிணைப் பகுதியை Strait of Hormuz வெகு விரைவில் மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் Donald Trump உறுதியளித்துள்ளார். பாகிஸ்தானில் இன்று (11) இடம்பெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் நீரிணையைத் திறக்கும் பணி சவாலானது என்றாலும், ஈரான் ஒத்துழைக்காத பட்சத்திலும் அமெரிக்கா தனித்துச் செயல்பட்டு அதனை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் கூறினார். சர்வதேச சந்தையில் நிலவும் எரிசக்தி […]

உலகம் செய்தி

ஒட்டுமொத்த உலகையும் திருப்பிபார்க்க வைத்த ஈரான் சபாநாயகரின் X பதிவு!

  • April 11, 2026
  • 0 Comments

அமைதி பேச்சுக்காக இஸ்லாமாபாத் வருவதற்கு முன்னர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் பதிவிட்ட எக்ஸ் பதிவானது உலகின் கவனர்த்தை ஈர்த்துள்ளது. அவர் வெளியிட்ட படமும், அதற்கு வழங்கிய தலைப்பும் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது. ஈரான் மினாப் நகரில் பாடசாலைமீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 168 மாணவர்கள் பலியானார்கள். ஈரான் பேச்சுக்குழு பயணித்த விமானத்தில் முன் இருக்கையில் உயிரிழந்த மாணவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்தச் செயல் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் துயரத்தையும் அதன் தூதரக முயற்சிகளையும் உலகுக்கு அடையாளப்படுத்துகிறது. […]

உலகம் செய்தி

அமைதி பேச்சு இன்று: 71 பேரடங்கிய உயர்மட்ட குழுவை களமிறக்கியது ஈரான்!

  • April 11, 2026
  • 0 Comments

  ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாப் Mohammed-Baqer Qalibaf தலைமையில் 71 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவினர் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர். ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான அமைதி பேச்சுவார்த்தை இன்று (11) இஸ்லாமாபாத்தில் நடைபெறுகின்றது. இதில் பங்கேற்கவுள்ள ஈரான் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் போன்ற மிக முக்கியமான தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர். நிபுணத்துவ ஆலோசகர்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் அடங்கிய இந்த விரிவான […]

error: Content is protected !!