உலகம் செய்தி

லெபனானில் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!

  • April 10, 2026
  • 0 Comments

லெபனானில் வான்வழி தாக்குதலை உக்கிரமாக நடத்திவரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கமைய லெபனானின் Bint Jbeil நகருக்குள் நுழைய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது. இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லாஹ் அமைப்பு கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேலியப் படைகள் மீது 50-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது. இருதரப்பிற்கும் இடையே நிலவும் இந்த மோதலானது லெபனானின் தெற்குப் பகுதிகளில் பெரும் போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது. லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம் என உலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், அதனை ஏற்கும் […]

உலகம் செய்தி

இழுபறியில் இஸ்லாமாபாத் பேச்சு! பங்கேற்குமா ஈரான் தூதுக்குழு?

  • April 10, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தொடர்ச்சியான தாக்குதல்களால் பாகிஸ்தானில் அமெரிக்காவுடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. போர் நிறுத்தத்துக்காக முன்னதாக ஒப்புக்கொள்ளப்பட்ட திட்டங்களில் அமெரிக்கா திடீர் மாற்றங்களைச் செய்துள்ளதால், அந்நாடுமீது ஈரான் நம்பிக்கை இழந்துள்ளது என சில அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேபோல ஈரானைத் தாக்கிய தரப்புடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அந்நாட்டு மக்கள் மத்தியில் எதிர்ப்பு உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இஸ்லாமாபாத் பேச்சில் ஈரான் பங்கேற்குமா என்பது […]

செய்தி விளையாட்டு

Rajasthan Royals அணியின் வெற்றிநடை தொடருமா?

  • April 10, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் 16 ஆவது லீக் ஆட்டத்தில் Rajasthan Royals , Royal Challengers Bangalore ஆகிய அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு குவாஹாட்டியில் இப்போட்டி ஆரம்பமாகும். RCB அணி தனது முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 6 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கேவை 43 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியிருந்தது. இந்த இரு ஆட்டங்களையும் RCB அணி தனது சொந்த மைதானத்தில் விளையாடி இருந்தது. தற்போது நடப்பு […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழரசுக் கட்சி ஆதரவு!

  • April 10, 2026
  • 0 Comments

வலு சக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்பது என்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி தீர்மானித்தது. கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்று மாலை இணைய வழியில் கூடி இந்தத் தீர்மானத்தை எடுத்தனர். இணைய வழியில் கூட்டத்தில் பங்குபற்றிய அனைத்து உறுப்பினர்களுமே ஏகமனதாக இந்த முடிவுக்கு வந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் இணைய வழியில் பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கூட்டத் தீர்மானம் எடுக்கப்பட்ட சமயம் இணைய இணைப்பில் இருந்து வெளியேறி […]

உலகம்

லெபனானுடன் நேரடி பேச்சு நடத்த தயாராகும் இஸ்ரேல்?

  • April 10, 2026
  • 0 Comments

ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுதபாணியாக்க லெபனானுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் முன்வந்துள்ளது என தெரியவருகின்றது. எனினும், அங்கு தாக்குதலை முற்றாக நிறுத்துவது தொடர்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஆதரவாக இஸ்ரேல் தனது தாக்குதல்களைக் குறைக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதே வேளையில், முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை கையாள்வதில் ஈரான் காட்டும் மெத்தனம் மற்றும் ஒப்பந்த மீறல்களை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இலங்கை

தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் மோதல் – ஒருவர் பலி

  • April 10, 2026
  • 0 Comments

ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விருந்து நிகழ்வின் போது, மாணவர்களுக்கு இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தர்க்கம் பின்னர் மோதலாக மாறியதில் குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த மாணவரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதேவேளை, இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் […]

அரசியல் இலங்கை செய்தி

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில்: 10 பேர்கொண்ட குழு நியமனம்!

  • April 10, 2026
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது சந்திப்பில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயத்தை ஒட்டி கட்சிகள் எல்லாவற்றினாலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிக்காக சட்டத்துறையினர் ஐவரையும், கட்சிகளின் ஐந்து பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை: NPP அரசு திட்டவட்டம்!

  • April 10, 2026
  • 0 Comments

“பொருளாதார வீழ்ச்சி, இனவாதம் என்பவற்றை வைத்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என சிலர் நினைக்கின்றனர். அது பகல் கனவு மாத்திரமே. எமது ஆட்சியை குறுக்கு வழியில் கவிழக்க முடியாது.” – என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். சட்டத்தின் பிரகாரமே ஆட்சி நடத்தப்பட்டுவருகின்றது. மக்களுக்கான சட்டங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டில் வரிசை யுகம் ஏற்பட வேண்டுமெனக் கருதி ஒரு சில எதிரணி […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம்: பாகிஸ்தானின் உதவியை கோருகிறது லெபனான்!

  • April 9, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது லெபனான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார். அதேபோல இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த பாகிஸ்தான் உதவ வேண்டும் என லெபனான் பிரதமர் Nawaf Salam கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஈரானும் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை நடக்கப்போவது என்ன?

  • April 9, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (10) விவாதம் நடத்தப்படவுள்ளது. மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது உறுதி. எனினும், தரமற்ற நிலக்கரி இறக்குமதிமூலம் இடம்பெற்றுள்ள மோசடியை வெளிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது […]