அரசியல் இலங்கை செய்தி

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஓரணியில்: 10 பேர்கொண்ட குழு நியமனம்!

  • April 10, 2026
  • 0 Comments

இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் புதிய அரசமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வரும் நோக்கில் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையினால் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டாவது சந்திப்பில் புதிய அரசமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அடிப்படை அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயத்தை ஒட்டி கட்சிகள் எல்லாவற்றினாலும் ஏற்றுக்கொள்ளத் தக்க ஆவணம் ஒன்றை தயாரிக்கும் பணிக்காக சட்டத்துறையினர் ஐவரையும், கட்சிகளின் ஐந்து பிரதிநிதிகளையும் கொண்ட குழு ஒன்றை நியமிப்பதற்கு நேற்றைய கூட்டத்தில் […]

அரசியல் இலங்கை செய்தி

ஆட்சி கவிழ்ப்புக்கு இடமில்லை: NPP அரசு திட்டவட்டம்!

  • April 10, 2026
  • 0 Comments

“பொருளாதார வீழ்ச்சி, இனவாதம் என்பவற்றை வைத்து ஆட்சியைக் கைப்பற்றலாம் என சிலர் நினைக்கின்றனர். அது பகல் கனவு மாத்திரமே. எமது ஆட்சியை குறுக்கு வழியில் கவிழக்க முடியாது.” – என்று பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். சட்டத்தின் பிரகாரமே ஆட்சி நடத்தப்பட்டுவருகின்றது. மக்களுக்கான சட்டங்கள் முறைகேடாக பயன்படுத்தப்படவில்லை எனவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “நாட்டில் வரிசை யுகம் ஏற்பட வேண்டுமெனக் கருதி ஒரு சில எதிரணி […]

உலகம் செய்தி

போர் நிறுத்தம்: பாகிஸ்தானின் உதவியை கோருகிறது லெபனான்!

  • April 9, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளின் பிரதமர்களுக்கிடையில் தொலைபேசி ஊடாக முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது லெபனான்மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களை பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif வன்மையாகக் கண்டித்துள்ளார். அதேபோல இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த பாகிஸ்தான் உதவ வேண்டும் என லெபனான் பிரதமர் Nawaf Salam கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கும் பொருந்தும் என மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்ட பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. ஈரானும் […]

அரசியல் இலங்கை செய்தி

நம்பிக்கையில்லாப் பிரேரணை: நாளை நடக்கப்போவது என்ன?

  • April 9, 2026
  • 0 Comments

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் நாளை (10) விவாதம் நடத்தப்படவுள்ளது. மேற்படி பிரேரணையை தோற்கடிப்பதற்குரிய பெரும்பான்மை பலம் ஆளுங்கட்சி வசம் இருப்பதால் அது தோல்வி அடையும் என்பது உறுதி. எனினும், தரமற்ற நிலக்கரி இறக்குமதிமூலம் இடம்பெற்றுள்ள மோசடியை வெளிப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது. தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் அரசுக்கு பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது […]

உலகம் செய்தி

இஸ்ரேலுக்கு ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் செயல் என ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேலின் நடவடிக்கை ஏமாற்று வேலை என்றும், இதனால் பேச்சுவார்த்தைகள் பயனற்றுப் போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மக்களுக்கு ஈரான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் எந்த ஒரு தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருப்பதாகவும் Masoud Pezeshkian கூறியுள்ளார். அதேவேளை, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் இஸ்ரேல் கடுமையான விளைவுகளைச் சந்திக்கும் என்று ஈரான் சபாநாயகரும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் செய்தி

இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: எட்டப்படுமா தீர்வு?

  • April 9, 2026
  • 0 Comments

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. இதன் ஓர் அங்கமாக கலந்துரையாடல் நடைபெறும் பகுதிகளிலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து, ஒரு பொதுவான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு பாகிஸ்தான் முயற்சித்துவருகின்றது. எனினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களால் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியதோடு, […]

இலங்கை செய்தி

அவசரகாலச் சட்டம் நீடிப்பு: தமிழரசுக் கட்சி போர்க்கொடி!

  • April 9, 2026
  • 0 Comments

அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “அத்தியாவசிய சேவைகள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கப்பெறவேண்டும். மக்களுக்கு இதனை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் அடிப்படைக் கடமையாகும். அதற்காக அவசரகாலச்சட்டம் நீடிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியினர் […]

இலங்கை செய்தி

கத்திக்குத்து தாக்குதலில் பெண் பலி: வவுனியாவில் பயங்கரம்!!

  • April 9, 2026
  • 0 Comments

வவுனியா, செக்கடிப்புலவு பகுதியில் தனது சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான பெண், சிகிச்சை பலனின்றி வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செக்கடிப்புலவு கிராமத்தைச் சேர்ந்த பவளரத்தினம் செல்வமலர் (வயது 56) என்ற பெண்ணுக்கும், அவரது சகோதர முறையான ஒருவருக்கும் இடையில் நேற்று இரவு திடீரெனத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது, மதுபோதையில் இருந்த மேற்படி நபர், ஆத்திரமடைந்து தனது சகோதரியைக் கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த பெண்ணை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் […]

உலகம் செய்தி

தாக்குதல் தொடரும்! இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்!!

  • April 9, 2026
  • 0 Comments

லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர்மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு Benjamin Netanyahu திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் மக்களின் பாதுகாப்பிற்காக இந்தத் தற்காப்பு நடவடிக்கை தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் சர்வதேச ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனான்மீதான தாக்குதலை நிறுத்துமாறு மேலும் பல நாடுகளும் வலியுறுத்தியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானும் இணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தாக்குதலை […]

இலங்கை செய்தி

விவசாயத்துறைக்கு நவீன தொழில்நுட்பம் அவசியம்!

  • April 9, 2026
  • 0 Comments

“உலகில் எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படாதிருப்பதற்கு எமது விவசாயிகளின் உன்னதமான அர்ப்பணிப்பே காரணமாகும்.” என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். 2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது. அதன்பின்னர் மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். இதன்போது உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இரத்தம், […]

error: Content is protected !!