இலங்கை செய்தி

இலங்கையில் உழைக்கும் போது செலுத்தும் வரியை குறைக்க நடவடிக்கை!

இலங்கையில் உழைக்கும் போது செலுத்தும் வரியை குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பிரேரணையின் படி, தற்போது ஒவ்வொரு சம்பள விகிதத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரிகள் பின்வருமாறு குறைக்கப்படும்.

மாதாந்தம் 150,000 ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 3,000 ரூபாய் வரி 500 ரூபாவால் குறைக்கப்பட்டு 2,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

அதேபோல், மாதாந்தம் 300,000 ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 7,000 ரூபாய் வரி 3,500 ரூபாய் குறைக்கப்பட்டு 3,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

அதேபோல், மாதாந்தம் 450,000 ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 76,000 ரூபாய் வரி 12,500 ரூபாவால் குறைக்கப்பட்டு 63,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.

மாதாந்தம் 6 இலட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபரொருவர் மாதாந்தம் செலுத்தும் 120,000 ரூபாய் வரி 12,500 ரூபாவால் குறைக்கப்பட்டு 107,500 ரூபாவாக வசூலிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை