இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை: அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள்

தற்போது கலைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த பல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் அரசியலில் இருந்து விலக தீர்மானித்துள்ளனர்.

அவர்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் முன்னாள் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ச ஆகியோர் அடங்குவர்.

ஏனையவர்களில் காமினி லொகுகே, ஜோன் செனவிரத்ன, மைத்திரிபால சிறிசேன, பந்துல குணவர்தன, மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் அடங்குவர்.

இதேவேளை, முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, முன்னாள் ராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னக்கோன் மற்றும் செஹான் சேமசிங்க ஆகியோரும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தவிர சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) போன்ற பாரம்பரியக் கட்சிகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பெருமளவு இளைஞர்களை அரசியல் களத்தில் இறக்க முடிவு செய்துள்ளன.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை