செய்தி விளையாட்டு

SLvsAUS – முதல் நாள் முடிவில் 229 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி

இலங்கை -ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று கலே மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்செய்வதாக அறிவித்தது.

அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிஷங்கா மற்றும் திமுத் கருணரத்னே களமிறங்கினர். இதில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பதும் நிஷங்கா 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அதன்பின் கருணரத்னேவுடன் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தினேஷ் சண்டிமால் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 74 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த குசல் மெண்டிஸ் – ரமேஷ் மெண்டிஸ் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இதனால் இலங்கை அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் குசல் மெண்டிஸ் 59 ரன்களுடனும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி