ஐரோப்பா

சுவீடனில் பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு : 05 பேர் பலி!

ஸ்வீடனில் உள்ள ஒரு பள்ளியில் ஐந்து பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தலைநகர் ஸ்டாக்ஹோமிலிருந்து மேற்கே 200 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள ஓரேப்ரோ நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பள்ளியில் ஒரு ஆசிரியரிடமிருந்து “தானியங்கி ஆயுதங்களுடன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக” ஒரு குறுஞ் செய்தி கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தயாராக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்கள் விலகி இருக்குமாறு காவல்துறை வலியுறுத்தியது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்