இலங்கை

யாழில் கிரிக்கெட் பயிற்சி முகாம் ஆரம்பம்: வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் துடுப்பாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக ஜெப்னா ஸ்ரான்லியன்ஸ் இயக்குனர் க.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் தலைமையிலான குழுவினரால் இப்பயிற்சி பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

துடுப்பாட்டத்தில் திறமையானவர்களை கண்டறிவதற்கான பயிற்சி முகாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணம் சார்ந்த சிறந்த கிரிக்கட் வீர வீராங்கனைகள் தெரிவு செய்யப்படுவார்கள்.

13 வயதில் இருந்து 25 வயது வரையிலான வீர வீராங்கனைகள் இந்த பயிற்சியில் பங்கேற்க முடியும்.

பங்கேற்க விரும்புவோர் 0778013310 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அல்லது https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd8xmnpdRBxIyMrlepxiKBLq4uHVDP7x9YYXyy1Smfn9bb8-g/viewform?usp=pp_url என்ற இணைப்பின் ஊடாகவும் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

அதேவேளை, நிகழ்ச்சி தொடர்பில் கருத்து வெளியிட்ட இயக்குனர் க. ஸ்ரீதரன் “நாம் துடுப்பாட்ட அக்கடமி ஒன்றினை, யாழ்ப்பாணத்தில் நிறுவி வருகின்றோம்.

அது தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளது. அதில் துடுப்பாட்டம் தொடர்பில் விசேட பயிற்சிகளை வழங்கி திறமையான வீரர்களை உருவாக்க உள்ளோம். அதற்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்வே இந்த பயிற்சி முகமாகும்.

இதில் பாடசாலை மாணவர்கள், கழகங்கள், மாவட்ட துடுப்பாட்ட சங்க வீரர்கள் என அனைவரும் பங்கேற்க முடியும். இதில் 100 தொடக்கம் 150 பேர் வரையில் தேர்வு செய்யவுள்ளோம்.

தேர்வு செய்யப்படப்படும் வீர வீராங்கனைகள் எம்மால் ஸ்தாபிக்கப்படும் துடுப்பாட்ட அக்கடமியில் மேலும் பயிற்சிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தமது திறமையை வளர்த்து கொள்வதன் ஊடாக வடக்கில் சிறந்த துடுப்பாட்ட வீர வீராங்கனைகள் உருவாகுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு.

எம்மால் உருவாக்கப்படும் வீர வீராங்கனைகளை வெளிநாட்டு கழகங்கள், சுற்றுப்போட்டிகள் என்பவற்றில் பங்கேற்க முடிந்தவரையில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்போம்” என அவர் தெரிவித்தார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்