ஐரோப்பா

பிரான்ஸில் அமுலாகும் நடைமுறை – சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பிரான்ஸில் உள்ளூர் வீதிகளில், மணிக்கு 30 கிலோ மீற்றர் வேகம், 50 கிலோ மீற்றர் வேகம் குறித்த வேகத்தை விடவும் மணிக்கு 5 கிலோமீட்டர் அதிகமான வேகத்தில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகளுக்கு, ஓட்டுனர் உரிமத்தில் இருந்து புள்ளிகள் கழிக்கப்பட மாட்டாது எனவும், ஆனால் தண்டப்பணம் அறவிடப்படும் எனவும் அறிவித்திருந்தது.

இந்த நடைமுறை ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை வாகன சாரதிகள் வரவேற்றுள்ள நிலையில், பல சமூக நலத்துறை அமைப்புக்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

முன்பு வேக வீதிகளில் (autoroute) மணிக்கு 130km/h, 110km/h, 90km/h கிலோமீட்டர் வேகத்தை விடவும் அதிகமான வேகத்தில் பயணம் செய்தால், 5km/h வேகத்தை கழித்து ஒட்டுனர் உரிமத்தில் புள்ளிகள் கழிக்கப் படுவதுபோல், ஜனவரி மாதம் முதல் உள்ளூர் வீதிகளில், உதாரணமாக 50km/h வேகத்தை விடவும் 55km/h வேகத்தில் பயணித்தால் ஓட்டுனர் உரிமத்தில் புள்ளிகளை கழிக்காமல், தனியே தண்டப்பணம் மட்டும் அறவிடப்படும்.

குறித்த வேகத்தை விட அதிகரித்தால் புள்ளிகளும், தண்டப்பணமும் அறவிடப்படும்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்