இலங்கை செய்தி

மன்னாரில் ஹெரோயின் போதை பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபல் கைது

மன்னாரைச் சேர்ந்த ஹட்டன் பிரதேசத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தபல் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை(16) மாலை மன்னாரில் வைத்து பொலிஸ் புலனாய்வு துறை யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் மூர்வீதி புதிய தெரு பகுதியை சேர்ந்த லோரன்ஸ் போல் கிளிண்டன் மார்க் (வயது-28) என்ற ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கொஸ்தபல் இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என தெரிய வந்துள்ளது.

-குறித்த நபர் நேற்றைய தினம் புதன்கிழமை(16) மாலை மன்னார் பெரிய கடை பகுதியில் உள்ள மது விற்பனை நிலைய பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது உடமையில் இருந்து 100 மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வரும் நிலையில் குறித்த நபரை விசாரணைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை