இலங்கை

கொட்டாஞ்சேனையில் 4கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைபொருளுடன் இசைக்கலைஞர் ஒருவர் கைது

கொட்டாஞ்சேனை, சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இசைக்கலைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.

372 போதைப் பொருட்களையும், 1 கிலோ 558 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர் அத்துடன் சந்தேநபரையும் கைது செய்துள்ளனர்.

ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் குழுவொன்று குறித்த வீட்டை சுற்றிவளைத்து சோதனை நடத்தியதுடன், இசைக்கருவிகளுக்கு மத்தியில் டிரம்மொன்றில் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர் சில காலமாக, இசைக்கருவிகளை வாடகைக்கு கொடுப்பதில் ஈடுபட்டு இருந்துள்ளார். அந்த போர்வையில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்