ஆசியா

தென்கொரிய ஜனாதிபதி தொடர்பில் நீதிபதி வெளியிட்ட அறிவிப்பு

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலின் தடுப்புக்காவலை நீட்டிக்க தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சியை அறிவிக்க முயற்சி செய்த ஜனாதிபதி கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

குற்றவியல் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் ஜனாதிபதி யூன் பதவியில் இருக்கும்போதே கைதான முதல் கொரியத் தலைவராகும்.

அடுத்த மாதம் 6ஆம் திகதி வரை அவரைத் தடுப்புக்காவலில் வைக்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் திட்டமிட்டிருந்தனர்.

ஜனாதிபதி யூனின் தடுப்புக்காவலை நீட்டிப்பதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி தெரிவித்தார்.

தடுப்புக்காவலை நீட்டிக்க முடியாமல் போனதால் அவர் மீதான குற்றச்சாட்டை அதிகாரபூர்வமாகப் பதிவுசெய்வது கடினமாகக்கூடும்.

தென் கொரிய ஜனாதிபதி யூன் தொடர்ந்து விசாரணையில் ஒத்துழைக்க மறுத்துவருகிறார்.

விசாரணை மேற்கொள்வோருக்கு உரிய சட்ட அதிகாரம் இல்லை என்று அவரது வழக்கறிஞர்கள் குழு சொல்கிறது.

 

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்