இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் – தெஹ்ரான் பற்றி எரியும் என எச்சரிக்கை

ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேலியக் குடிமக்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தால், தெஹ்ரான் பற்றி எரியும் என்று இஸ்ரேல் எச்சரித்தது.

இஸ்ரேலிய ராணுவம், ஈரானில் 150க்கும் அதிகமான இடங்களைக் குறிவைத்து தாக்கியது.

அண்மைய தாக்குதல்களில் மேலும் மூன்று ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாய் கூறப்பட்டது. இதுவரை 9 அறிவியலாளர்கள் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களைப் பெறும் ஈரானின் ஆற்றலுக்கு இது பேரடி என்று இஸ்ரேல் கூறியது.

இதற்கிடையே இன்று காலை ஈரான் சுமார் 200 ஏவுகணைகளைப் பாய்ச்சியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. இதில் குறைந்தது மூவர் உயிரிழந்த நிலையில் பலர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலுக்கு அது பதிலடி என்று ஈரான் கூறியது.

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு உதவினால் வட்டாரத்தில் உள்ள அந்நாடுகளின் படைத் தளங்களும் கப்பல்களும் குறிவைக்கப்படும் என்று பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் ஆகியவற்றை ஈரான் எச்சரித்துள்ளது.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.