மத்திய கிழக்கு

காசாவில் 40 சதவீத பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள இஸ்ரேல்! இராணுவம் அறிவிப்பு

காசாவில், 40 சதவீத பகுதியை இஸ்ரேல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபரில் மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் மிக மோசமான தாக்குதல் நடத்தினர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போரை துவங்கியது.

இதில், காசாவில் இதுவரை 64,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது.

இந்நிலையில், காசாவை முழுமையாக கைப்பற்றுவது தான் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்கு நல்லது என இஸ்ரேல் கருதுகிறது.

“இஸ்ரேல் இராணுவம் தற்போது காசா நகரில் 40 சதவீத பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எதிர்வரும் நாட்களில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம். ஹமாஸை அழிப்பது, இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்பதே எங்கள் ராணுவத்தின் முக்கிய இலக்கு என இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் குறிப்பிட்டுள்ளார்.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.