மத்திய கிழக்கு

அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்த பேச்சு நடத்த தயாராகும் ஈரான்

அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே யுரேனியம் செறிவூட்டல் குறித்த மறைமுக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதில், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் அளவைக் 4 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த அமெரிக்கா வலியுறுத்தியது. காரணம், 90 சதவீதத்திற்கும் மேல் செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணு ஆயுத தயாரிப்புக்கு பயன்படுத்தக்கூடியதாக மாறும்.

இது தொடர்பான அமெரிக்காவின் திட்டங்களை ஈரான் நிராகரித்ததையடுத்து, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிலிருந்து தாக்குதல்களை ஈரான் எதிர்கொண்டது.

இந்நிலையில், “எங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதி அளிக்கப்படுமானால், அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்” என அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

SR

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.