செய்தி விளையாட்டு

IPL Update – முதல் நாள் முடிவில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ரிஷப் பண்ட்

IPL 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் துவங்கியது. இந்த ஏலத்தில் 574 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.

முதல் நாள் ஏலம் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. IPL வரலாற்றில் முதல் முறையாக ரிஷப் பண்ட் 27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.

2 கோடி எனும் அடிப்படை விலைக்கு பட்டியலிடப்பட்ட ரிஷப் பண்ட்-ஐ தங்கள் அணிக்கு வாங்க போட்டியிட்டனர். கடும் போட்டியில் மல்லுக்கட்டிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட்-ஐ 27 கோடிக்கு விலைக்கு வாங்கியது. இதுவரை நடைபெற்ற IPL ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

முன்னதாக இதே ஏலத்தில் பட்டியலிடப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் பஞ்சாப் கிங்ஸ் அணி 26 கோடியே 75 லட்சம் தொகைக்கு வாங்கி இருந்தது.

இது IPL ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக இருந்தது. பிறகு ரிஷப் பண்ட் ஏலத்தில் எடுக்கப்பட்டதும் ஸ்ரேயஸ் அய்யரின் சாதனை முறியடிக்கப்பட்டது.

கடந்த IPL தொடரில் லக்னோ அணியின் கேப்டனாக விளையாடிய கே.எல். ராகுல் டெல்லி அணி 14 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி