செய்தி விளையாட்டு

IPL Match 41 – தொடரின் 5வது வெற்றியை பதிவு செய்த மும்பை அணி

ஐ.பி.எல். தொடரின் 41வது லீக் ஆட்டத்தில் சனரைசர்ஸ் ஐதராபாத், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி டிரண்ட் போல்டின் துல்லிய பந்து வீச்சில் சிக்கியது. இதனால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

6வது விக்கெட்டுக்கு இணைந்த கிளாசன்-அபினவ் மனோகர் ஜோடி பொறுப்புடன் ஆடியது. கிளாசன் அரை சதம் கடந்து 71 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி சார்பில் போல்ட் 4 விக்கெட்டும், தீபக் சாஹர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 11 ரன்னில் அவுட்டானார். வில் ஜாக்ஸ் 22 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், மும்பை அணி 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 146 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 40 ரன் எடுத்து அவுட்டாகாமல் உள்ளார்.

இது மும்பை அணிக்கு கிடைத்த 5வது வெற்றி ஆகும். ஐதராபாத் அணியின் 6வது தோல்வி இதுவாகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி