ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் குழந்தை பாலியல் குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி சகோதரர்களுக்கு சிறைத்தண்டனை

  • October 7, 2025
  • 0 Comments

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி நபர் ஒருவருக்கு கிழக்கு லண்டன் நீதிமன்றத்தில் 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது சகோதரருக்கும் குழந்தைகளின் ஆபாச படங்களை வைத்திருந்ததற்காக 15 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் விசாரணைக்குப் பிறகு, 26 வயதான வ்ருஜ் படேல் மற்றும் அவரது சகோதரர் கிஷன் படேல் ஆகியோருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. படேல் சகோதரர்களால் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பலர் இருக்கலாம் என்று தெரிவித்த காவல்துறையினர் தற்போது மேலதிக விசாரணைகளை […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் எரிபொருள் நிலையத்தில் இந்திய மாணவரை சுட்டுக் கொன்ற டெக்சாஸ் நபர் கைது

  • October 7, 2025
  • 0 Comments

கடந்த வாரம் அமெரிக்காவின் டல்லாஸில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இந்திய மாணவரை கொலை செய்த குற்றவாளியை சட்ட அமலாக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 23 வயதான ரிச்சர்ட் ஃப்ளோரஸ் என்று அடையாளம் காணப்பட்ட இளைஞர், அக்டோபர் 4ம் திகதி எரிபொருள் நிலையத்தில் பகுதி நேர வேலை செய்து கொண்டிருந்த 28 வயது சந்திரசேகர் போலே மீது தாக்குதல் நடத்தி தப்பி சென்றார். குறித்த நபர் கொலை செய்துவிட்டு மற்றொரு வாகனத்தின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். […]

உலகம் செய்தி

ரஷ்ய ஜனாதிபதியின் 73வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

  • October 7, 2025
  • 0 Comments

இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடும் ரஷ்ய ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி அழைப்பு மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வரவிருக்கும் இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்கு அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். Xல் ஒரு பதிவில், “எனது நண்பர் ஜனாதிபதி புடினுடன் பேசி, பிறந்தநாள் வாழ்த்துக்களையும், அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். பல ஆண்டுகளாக இந்தியா-ரஷ்யா உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகாப்டர்

  • October 7, 2025
  • 0 Comments

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள நெடுஞ்சாலையில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஒரு விமானி, செவிலியர் மற்றும் துணை மருத்துவ அதிகாரி என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக நெடுஞ்சாலை 50ன் கிழக்கு நோக்கிய பாதைகள் மூடப்பட்டுள்ளதாக கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு தெரிவித்துள்ளது. ரீஷ் ஏர் (REACH AIR) நிறுவனம் “தமது எண்ணங்களும் வழிபாடுகளும் பாதிக்கப்பட்டவர்களை சுற்றியே […]

இந்தியா செய்தி

இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவில் சிக்கிய பேருந்து – 18 பேர் உயிரிழப்பு

  • October 7, 2025
  • 0 Comments

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி ஒரு தனியார் பேருந்து இடிபாடுகளுக்குள் புதைந்ததில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹரியானாவின் ரோஹ்தக்கிலிருந்து பிலாஸ்பூர் அருகே உள்ள குமர்வினுக்கு சுமார் 30 முதல் 35 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், […]

ஆசியா செய்தி

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் மீது வழக்கு பதிவு

  • October 7, 2025
  • 0 Comments

கடந்த மாதம் அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்த நேபாள இளைஞர்கள், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அப்போதைய உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். காத்மாண்டு மாவட்ட காவல் அலுவலகத்தில் வழக்கு பதிவு செய்து ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்பட்ட மரணங்களுக்கு அவர்களே பொறுப்பு என்று தெரிவித்துள்ளனர். மேலும், “அரசு முகவர்கள் செய்த கடுமையான குற்றம் தண்டிக்கப்படாமல் போகக்கூடாது, உரிய தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர். […]

செய்தி விளையாட்டு

Womens WC – இங்கிலாந்துக்கு எதிராக 178 ஓட்டங்கள் குவித்த வங்கதேசம்

  • October 7, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் அசாமின் கவுகாத்தியில் நடைபெறும் 8வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதையடுத்து, வங்காளதேச தொடக்க வீராங்கனைகளாக ரூப்யா ஹைதர், ஷார்மின் அக்தர் களமிறங்கி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய சொபானா பொறுப்புடன் விளையாடி […]

பொழுதுபோக்கு

புதுமையான சைக்கலாஜிகல் “கேம் ஆஃப் லோன்ஸ்” திரைக்கு வருகிறது

  • October 7, 2025
  • 0 Comments

JRG Productions சார்பில், தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் ஆன்லைன் கேமிங் மற்றும் லோனை மையமாக வைத்து புதுமையான சைக்கலாஜிகல் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “கேம் ஆஃப் லோன்ஸ்”. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி, தீபாவளிக்கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ளது. தற்போதைய நவீன உலகில் எதை வேண்டுமானாலும் ஆன்லைனில் வாங்கிக்கொள்ளும், சாதித்துக்கொள்ளும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. ஆன்லைன் எந்தளவுக்கு வரமாகவுள்ளதோ, அதே போல் ஒரு […]

பொழுதுபோக்கு

எம்.ஜி.ஆரின் பேத்தி டாக்டர் பிரசித்தா NR-வுக்கு கோலாகலமாக நடந்த திருமணம்

  • October 7, 2025
  • 0 Comments

‘முதல் மரியாதை’ புகழ் நடிகர் தீபன் (எ) ராமச்சந்திரன் அவர்களின் மகளும், மறைந்த டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் திருமதி ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் பேத்தியுமான டாக்டர் பிரசித்தா NR அவர்களின் திருமணம், இன்று காலை சென்னை வடபழனியில் உள்ள கிரீன் பார்க் ஹோட்டலில், பாரம்பரிய முறையில் கோலாகலமாக நடைபெற்றது. கல்வி மற்றும் விளையாட்டு ஆகிய இரண்டிலும் சிறந்து விளங்கும் டாக்டர் பிரசித்தா, சென்னை சர்ச் பார்க் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அங்கு அவர் 2014–2015-ஆம் […]

இலங்கை செய்தி

இலங்கை : ராஜபக்ஷக்களை சிறையில் அடைக்க முயற்சிக்கும் அரசாங்கம் – நாமல் குற்றச்சாட்டு!

  • October 7, 2025
  • 0 Comments

தற்போதைய அரசாங்கம் போலியான ஆதாரங்களை உருவாக்கி ராஜபக்ஷக்களை சிறையில் அடைக்க முயற்சித்தாலும், அது வெற்றிபெறாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்மதுல்ல போபிட்டியாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதி உலகம் முழுவதும் பயணம் செய்யப் போவதில்லை. நாடு முழுவதும் பயணம் செய்வது நல்லது, அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, நாட்டின் தலைவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்ள வேண்டும். […]

error: Content is protected !!