இந்தியா

இந்தியாவில் மண்ணுக்குள் புதைந்த பேருந்து – தொடரும் மீட்புப் பணி – அதிகாரிகள் வெளியிட்ட தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் மண் சரிவில் சிக்கிய பேருந்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் மண் சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விபத்து நடந்தபோது பேருந்தில் 30 முதல் 35 பயணிகள் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை மூன்று பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று இந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மலையின் பாரிய மண்மேடு பேருந்தின் மீது சரிந்து வீழ்ந்தமையினால் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் […]

உலகம்

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கனடியர்

  • October 8, 2025
  • 0 Comments

சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மது அருந்திய நிலையில் தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதான கனேடியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் தகவலின்படி, 5ஆம் திகதி காலை சுமார் 9.20 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. பயண அனுமதிச் சீட்டையும், கடவுச்சீட்டையும் காண்பிக்குமாறு கோரிய போது, குடிவரவு அதிகாரிகளிடம் பலமுறை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன் அவர் அதிகாரிகளின் […]

உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் உச்சக்கட்ட நெருக்கடி நிலை – 6,000 விமானங்கள் தாமதம்

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தால் பல நாடுகளுக்கு செல்லும் 6,000 க்கும் மேற்பட்ட விமான சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு தாமதமாகி உள்ளன. மேலும் சில விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் டென்வரைச் சுற்றியுள்ள முக்கிய விமான நிலையங்கள் ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டன. லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹொலிவுட் பர்பேங்க் விமான நிலையத்தில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு வசதி ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக திங்கள்கிழமை பிற்பகல் முதல் மாலை வரை […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

குடிநுழைவு விதிகளை கடுமையாக்கிய ட்ரம்ப்! விசா பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்கா வழங்கும் மாணவர் விசாக்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு ஒகஸ்டில் மாணவர் விசா அளவுகள் சுமார் 20 சதவீதம் குறைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த வீழ்ச்சிக்கு டொனால்ட் ட்ரம்பின் கடுமையான குடிநுழைவு விதிகளே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, மாணவர்கள் நேர்காணலுக்காக பதிவு செய்ய வேண்டிய புதிய நடவடிக்கைகள், சமூக ஊடக கணக்குகளை சரிபார்ப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விசா கிடைப்பதை சிக்கலாக்கியுள்ளன. கடந்தாண்டில் […]

உலகம்

உலகளவில் இ-சிகரெட் பயன்படுத்தும் 10 கோடி பேர்! சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

உலகம் முழுவதும் 10 கோடி பேர் இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்தி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு இ-சிகரெட்டுகளைப் பயன்படுத்துபவர்களில் 1.5 கோடிக்கு மேற்பட்டோர் சிறுவர்கள் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இ-சிகரெட்டுகள், நிகோடின் கலந்த திரவங்களை ஆவியாக மாற்றி புகையாக விடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன. இதில் புரொப்பிலின் கிளைகால், கிளிசரின், கன உலோகங்கள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் உள்ளன. இந்தவகை பொருட்கள் உடலுக்குத் […]

இலங்கை

இலங்கை மக்களுக்கு பொலிஸார் விடுத்த எச்சரிக்கை – வட்ஸ்அப்பில் வரும் ஆபத்து

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம், மூலம் நடத்தப்படும் மோசடி நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர். சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் குறித்து அதிகளவில் முறைப்பாடுகள் கிடைப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மக்கள் தங்கள் கணக்கு எண்கள், கடவுச்சொற்கள், பயனர் பெயர் மற்றும் QR குறியீடுகளைக் கொடுத்து மோசடிக்குள் சிக்கிக் கொள்வதாக தெரியவந்துள்ளது. பின்னர் இணைய வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி பல்வேறு கணக்குகளுக்கு பணத்தை வரவு வைப்பது போன்ற மோசடிகள் மேற்கொள்ளப்படுவதாக முறைப்பாடுகள் […]

உலகம் செய்தி

பிரேசிலில் மெத்தனால் விஷத்தால் மூன்றாவது நபர் உயிரிழப்பு

  • October 7, 2025
  • 0 Comments

பிரேசிலின் சாஹோ பாலோவில் (São Paulo) மெத்தனால் விஷத்தால் 30 வயதுடைய புருனா அராஜோ டி சௌசா என்ற பெண் உயிரிழந்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த வாரம் வோட்கா (Vodka) பானம் அருந்திய பிறகு இரண்டு ஆண்கள் மெத்தனால் விஷத்தால் உயிரிழந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தை தொடர்ந்து 11 வணிகங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் 10,000க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கலப்படம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது தற்செயலானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

ஐரோப்பா செய்தி

டென்மார்க்கில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க திட்டம்

  • October 7, 2025
  • 0 Comments

15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக டென்மார்க் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இந்த திட்டத்தை அறிவித்துள்ளார், ஆனால் நடைமுறையில் எவ்வாறு மற்றும் எப்போது செயல்படும் என்பதை தெரிவிக்கவில்லை. “தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்கள் நம் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைக் கொள்ளையடிக்கின்றன. மேலும், அதிகமாக அடிமையாகுவதால் அவர்களது கல்வி நடவடிக்கைகள், உடல் ஆரோக்கியங்கள் பாதிக்கப்படுகின்றது” என்று பிரதமர் ஃபிரடெரிக்சன் குறிப்பிட்டுள்ளார். டென்மார்க் தற்போது 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு Facebook, […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

போப் லியோவின் முதல் வெளிநாட்டு பயணங்கள் அறிவிப்பு

  • October 7, 2025
  • 0 Comments

போப் லியோ XIV, போப்பாக தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கான இடங்களாக துருக்கி மற்றும் லெபனானைத் தேர்ந்தெடுத்துள்ளார். போப் பிரான்சிஸின் மறைவுக்குப் பிறகு மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட லியோ, நவம்பர் 27 முதல் 30 வரை துருக்கிக்கும் அதைத் தொடர்ந்து நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை லெபனானுக்கும் பயணம் மேற்கொள்வார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. வத்திக்கானின் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி, “இரு நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் திருச்சபை அதிகாரிகளின் அழைப்பை ஏற்று […]

செய்தி விளையாட்டு

Womens WC – 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி

  • October 7, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில் அசாமின் கவுகாத்தியில் நடைபெற்ற 8வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்காளதேசம் 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ஓட்டங்கள் குவித்தது. வங்கதேச அணி சார்பில் சொபானா 60 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், 179 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் தடுமாறினாலும் போட்டியின் […]

error: Content is protected !!