செய்தி விளையாட்டு

Womens WC – பாகிஸ்தானுக்கு எதிராக 221 ஓட்டங்கள் குவித்த ஆஸ்திரேலியா

  • October 8, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்த வகையில், கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடந்து வரும் 9வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹீலி மற்றும் லிட்ச்பீல்ட் களம் இறங்கி குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை […]

பொழுதுபோக்கு

இலங்கை வருவதற்கு நடிகை ஷில்பா ஷெட்டிக்கு அதிரடியாக தடை விதிப்பு

  • October 8, 2025
  • 0 Comments

ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள நடிகை ஷில்பா ஷெட்டிக்கு இலங்கைக்குச் செல்ல மும்பை உயர் நீதிமன்றம் இன்று அனுமதி மறுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீதிமன்ற பரிசீலனைக்கு முன்னதாக, அவர் மீதுள்ள 60 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டுகளை முதலில் தீர்க்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோருக்கு எதிராகப் பொருளாதாரக் குற்றப் பிரிவு வெளியிட்டுள்ள தேடுதல் அறிக்கை இன்னும் நடைமுறையில் இருப்பதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. இதன் […]

பொழுதுபோக்கு

ஹீரோவாக களமிறங்கும் துணை முதல்வரின் மகன்

  • October 8, 2025
  • 0 Comments

நடிகரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி கதாநாயகனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் முழுநேர அரசியலுக்கு வந்ததும் சினிமாவிலிருந்து விலகினார். இதையடுத்து, உதயநிதியின் மகன் நடிப்பு உலகுக்கு வருகின்றார். தற்போது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும், இன்பநிதியின் முதல் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் இவர் சினிமாவுக்கு வருவது மட்டும் உறுதியாகி உள்ளது.  

ஆசியா

மியன்மாரில் பண்டிகையின்போது ஒன்று கூடிய மக்கள் மீது தாக்குதல் – 40 பேர் பலி!

  • October 8, 2025
  • 0 Comments

மியன்மாரில் அரசுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டத்தில் ஏறக்குறைய 40 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியான்மரின் சாங் யூ நகரில் புத்தமத பண்டிகையின் போது, ஒன்றுக்கூடிய மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில்  போராட்டம் நடத்திய மக்கள் மீது மியான்மர் இராணுவம் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் 40 பேர் உயிரிழந்துள்ளதுடன், 80 பேர் வரை படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு […]

உலகம்

கலிபோர்னியா மாநிலத்தில் தீபாவளி பண்டிகை அரசு விடுமுறையாக அறிவிப்பு

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் தீபாவளி பண்டிகையை, அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இதன்மூலம் தீபாவளியை உத்தியோகபூர்வமாக விடுமுறையாக அறிவித்த மூன்றாவது அமெரிக்க மாநிலமாக கலிபோர்னியா மாறியுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் AB 268 என்ற சட்டமூலம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது, ஆளுநர் கவின் நியூசம் கையெழுத்திட்டு சட்டமாக அறிவித்துள்ளார். புதிய சட்டத்தின் அடிப்படையில், தீபாவளி நாளில் அரசாங்க ஊழியர்கள், பாடசாலைகள் மற்றும் சமூகக் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. தற்போது கலிபோர்னியாவின் அரசு விடுமுறை நாட்கள் எண்ணிக்கை 11 […]

இலங்கை

இலங்கையில் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகள் மூடப்படுமா? பிரதமர் விளக்கம்!

  • October 8, 2025
  • 0 Comments

இலங்கையில் குறைந்த மாணவர் எண்ணிக்கை கொண்ட பாடசாலைகளை மூடுவது தொடர்பாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய பல முக்கிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதன்படி, சிறிய பாடசாலைகளை மூடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஒரு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். எனவே, இந்த நிலைமையை முறையாகத் தீர்க்க, பாடசாலைகளில் குழந்தைகளைச் சேர்ப்பதற்கான நடைமுறையை சரியாக செயல்படுத்துவது அவசியம். இதற்கிடையில், கல்வி அமைச்சகம் 2025 […]

இன்றைய முக்கிய செய்திகள் உலகம்

கனேடிய விமான நிலையங்களில் ஏற்பட்ட ஸ்தம்பிதம் தொடர்பில் வெளியான தகவல்

  • October 8, 2025
  • 0 Comments

கனேடிய விமான நிலையங்களில் அண்மையில் ஏற்பட்ட ஸ்தம்பித நிலைமை குறித்து கனடா எல்லைச் சேவைகள் முகவரகம் விளக்கம் அளித்துள்ளது. இணையவெளி தாக்குதல் மூலம் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பக் கோளாறு இல்லை எனவும், வழமையாக மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி நிகழ்ந்த இந்த கோளாறு வழக்கமான அமைப்பு பராமரிப்புப் பணிகளின் போது ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பப் பிரச்சனை என விளக்கப்பட்டுள்ளது. இந்த கோளாறு சுமார் 48 மணிநேரத்திற்குள் […]

இலங்கை

விமானத்தில் சைவ உணவு மறுக்கப்பட்டதால் இலங்கையருக்கு நேர்ந்த துயரம்!

  • October 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்துவந்த 85 வயதுடைய ஓய்வுபெற்ற இருதயநோய் நிபுணரான அசோக ஜயவீர, இலங்கை வந்த கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் உயிரிழந்த விடயம் தொடர்பில் குடும்பத்தினர் விமான நிறுவனம் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர். கட்டார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானத்தில் அவர் கோரிய சைவ உணவு (Vegetarian Meal) மறுக்கப்பட்ட நிலையில் அவருக்கு வேறு உணவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த உணவு தொண்டையில் சிக்கி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. உயிரிழந்த மருத்துவரின் மகனான சூர்யா ஜயவீர கடந்த […]

பொழுதுபோக்கு

கவின் – நயன்தாரா படத்தின் First Look வெளியானது

  • October 8, 2025
  • 0 Comments

கவின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கிஸ்.வ்தற்போது கவின், விஷ்ணு இடவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் முதன்மை ரோலில் நயன்தாரா நடிக்கிறார். 7 ScreenStudio தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இன்று இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. தற்போது, இப்படத்தின் First லுக் வெளியாகி உள்ளது.

விளையாட்டு

விளையாட்டுத் துறையில் முதல் பில்லியனர் என்ற பெருமையை பெற்ற ரொனால்டோ

  • October 8, 2025
  • 0 Comments

போர்த்துகல் கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். ரொனால்டோ ஒரு பில்லியன் டொலர் சொத்து மதிப்பை கொண்ட முதல் கால்பந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவரது நிகர சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக ப்ளூம்பெர்க் (Bloomberg) நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி கிளப் அல்-நாஸ்ருடனான அவரது இலாபகரமான ஒப்பந்தம், நைக் மற்றும் ஆர்மானி போன்ற நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தங்களை ரொனால்டோ செய்துள்ளார். அத்துடன் பிற வணிக முயற்சிகளால் பெருந்தொகை பணத்தை […]

error: Content is protected !!