உலகம்

மடகாஸ்கர் அரசுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராணுவம்

  • October 13, 2025
  • 0 Comments

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான மடகாஸ்கரில்(Madagascar) ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா(Andry Rajoelina) தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் Gen-Z(Generation Z) போராட்டத்திற்கு அந்நாட்டு ராணுவம் ஆதரவு தெரிவித்துள்ளது . தண்ணீர், மின் பற்றாக்குறை காரணமாக தொடங்கிய போராட்டம் தீவிரமடைந்தது. இந்நிலையில், மடகாஸ்கர்(Madagascar) ராணுவத்தின் கேப்சாட் (CAPSAT)பிரிவு முழு ராணுவத்தையும் கைப்பற்றி அதிபருக்கு எதிராக திரும்பியுள்ளது. இதனால் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சி அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றும் முயற்சி நடந்து வருவதாக மடகாஸ்கர் […]

இந்தியா

கரூர் துயரம் சம்பவம் – 41 குடும்பங்களையும் தத்தெடுக்கும் விஜய்!

  • October 13, 2025
  • 0 Comments

கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து கருத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த   தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கரூரில் உயிரிழந்த 41 குடும்பங்களையும் தத்தெடுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கரூரில் உயிரிழந்த எங்கள் உறவுகளின் […]

உலகம்

ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலை உயர்வு – வீதிக்கு இறங்கிய மக்கள்!

  • October 13, 2025
  • 0 Comments

ஈக்வாடோரில் ( Ecuador) எரிபொருள் விலையை எதிர்த்து நேற்று மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். தலைநகர் கியூட்டோவில் (Quito) ஒன்றுக்கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலைகளை மறித்து, டயர்களை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் இந்நடவடிக்கைக்கு எதிராக காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக்குண்டுகளைப் பிரயோகித்ததுடன், தடியடியும் நடத்தியுள்ளதாக ஏபிசி இணையத்தளம்  செய்தி வெளியிட்டுள்ளது. இதன்போது ஊர்வலமாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்நாட்டின் ஜனாதிபதியான டேனியல் நோபோவாவை (Daniel Noboa)  எதிர்த்தும் குரல் எழுப்பியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருள் மானியம் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், டீசல் விலையானது கேலனுக்கு $1.80 இலிருந்து […]

உலகம்

தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து – நாற்பதிற்கும் மேற்பட்டோர் பலி!

  • October 13, 2025
  • 0 Comments

தென்னாப்பிரிக்காவின் மலைப்பகுதியில் பேருந்து ஒன்று குடைசாய்ந்து  விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பிரிட்டோரியாவிலிருந்து  (Pretoria)வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் (248 மைல்) தொலைவில் உள்ள லூயிஸ் டிரிச்சார்ட் (Louis Trichardt) நகருக்கு அருகில் நேற்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்த்து வருவதாகவும் சாலைப் போக்குவரத்து மேலாண்மைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சைமன் ஸ்வானே தெரிவித்துள்ளார். குறித்த பேருந்தில் ஜிம்பாப்வே (Zimbabwe) மற்றும் மலாவி (Malawi) நாட்டினர் பயணம் […]

உலகம்

அமைதி ஒப்பந்தம் – ட்ரம்பிற்கு வழங்கப்படும் இஸ்ரேலின் உயரிய விருது!

  • October 13, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றி சிறப்பு அறிக்கை வெளியிட உள்ளதாக ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ட்ரம்பிற்கு இஸ்ரேலின் மிக உயர்ந்த விருதும், பதக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் டிரம்ப் ஹமாஸ் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவர்  இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு வருகை தந்திருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, காசா அமைதி […]

பொழுதுபோக்கு

அந்த ஒரு வார்த்தையால் சரிகமபா மேடையை கலங்க வைத்த சபேசன்

  • October 13, 2025
  • 0 Comments

zee தமிழ் என்றாலே அனைவருக்கும் நினைவில் வரும் மிகப்பிரபல்யமான ஒரு நிகழ்ச்சிதான் “சரிகமபா”. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த இசை நிகழ்ச்சிக்கு அனைவரும் அடிமைகள் தான். தற்போது zee தமிழ் சரிகமபா சீசன் 5 ஆரம்பிக்கப்பட்டு இறுதி தருணத்தை எட்டியுள்ளது. இதில் இறுதி போட்டியாளர்களை தெரிவு செய்யும் சுற்று நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. zee தமிழ் இந்திய கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல் உலகளவில் திறமையுள்ள அனைவருக்கும் வாய்ப்பு வழங்குகின்றது. குறிப்பாக ஈழத்து வாரிசுகள் சரிகமபா நிகழ்ச்சி மேடையை கலக்கி […]

உலகம்

மேலும் 13 பணயக்கைதிகளை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ள ஹமாஸ்

  • October 13, 2025
  • 0 Comments

தெற்கு காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் 13 பணயக்கைதிகள் ஒப்படைக்கப்பட்டு இஸ்ரேலுக்குத் திரும்பி வருவதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் இன்று அதிகாலை விடுவிக்கப்பட்ட ஏழு கைதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ளது எய்டன் ஆபிரகாம் மோர்(25), காலி பெர்மன்(28), ஜிவ் பெர்மன்(28),ஓம்ரி மீரான்(48),ஆலோன் ஓஹெல்(24),கை கில்போ-டலால்(24),மாடன் ஆங்ரெஸ்ட்(22) என்பவர்கள் ஆவர். இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ள 1,718 பாலஸ்தீனியர்களின் பெயர்களையும் பாலஸ்தீன கைதிகள் சங்கம் வெளியிட்டுள்ளது.

இந்தியா

இருமல் மருந்து விவகாரம்; தயாரிப்பாளர் வளாகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

  • October 13, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தைக் குடித்ததால் 22 குழந்தைகள் உயிரிழந்தன. இதுகுறித்து மத்தியப் பிரதேச தனிப்படைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் ஃபார்மா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கொலை முயற்சியில்லாமல் மரணம் விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய இரு சட்டப் பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனை(75), சென்னை கோடம்பாக்கத்தில் […]

இலங்கை

இலங்கையில் அரிசி பற்றாக்குறை? வதந்திகள் குறித்து எச்சரிக்கை

  • October 13, 2025
  • 0 Comments

இலங்கையில் செயற்கையான முறையில் அரிசிக்கு தட்டுப்பாட்டை செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில், இவ்வாறு செய்யப்படுவதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என போலியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரசாங்கம் நிர்ணயித்த விலையை […]

பொழுதுபோக்கு

‘கருப்பு’ ரிலீஸ் குறித்த உண்மையை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

  • October 13, 2025
  • 0 Comments

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கிராமத்து […]

error: Content is protected !!