உலகம்

மடகாஸ்காரில் (Madagascar) தீவிரமடைந்த போராட்டம் – நாட்டை விட்டு வெளியேறிய ஜனாதிபதி!

  • October 13, 2025
  • 0 Comments

மடகாஸ்கரின் (Madagascar) ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் பிற அதிகாரிகளும் இன்று தெரிவித்துள்ளனர். அவர் பிரான்ஸின் விமானமொன்றில் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக இராணுவ  வட்டாரம் ராய்ட்டர்ஸிடம் (Reuters )தெரிவித்துள்ளது. தண்ணீர், மின் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து அந்நாட்டில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்திற்கு இராணுவத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான சிடெனி ராண்ட்ரியானாசோலோனியாகோ (Siteny Randrianasoloniaiko) […]

ஐரோப்பா

மீண்டும் பதவியேற்றதை அடுத்து புதிய பிரெஞ்சு அமைச்சரவையை நியமித்துள்ள லெகோர்னு

  • October 13, 2025
  • 0 Comments

பிரான்ஸின் புதிய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள செபாஸ்டியன் லெகோர்னு (Sebastien Lecornu) நேற்று தனது புதிய அமைச்சரவையை நியமித்துள்ளார். புதிய அமைச்சரவையில் முந்தைய அரசாங்கங்களில் பணியாற்றிய பல உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த புதிய அணி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. புதிய நியமனங்களில், முன்னாள் தொழிலாளர் அமைச்சர் கேத்தரின் வௌட்ரின் (Catherine Vautrin) என்ற புதிய பாதுகாப்பு அமைச்சர் இடம்பெற்றுள்ளார். அவர் உக்ரைனுக்கான இராணுவ ஆதரவை மேற்பார்வையிடவும், ரஷ்யாவால் ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்புக்கு […]

பொழுதுபோக்கு

ஈழத்தாய் ஈன்ற வெற்றி நாயகன் வாகீசன்… இவரின் கனவு என்ன தெரியுமா?

  • October 13, 2025
  • 0 Comments

“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாரதியார் நமது தமிழை புகழ்ந்து பாடியுள்ளார். அந்த வகையில், இலங்கை மண் பல திறமைசாளிகளை இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தியது. இலங்கைத் தமிழுக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதிலும் ஈழத்தமிழர்களின் தமிழ் வேறு எந்த மொழிகளுக்கு இணையாகாது. இந்த தமிழுக்கு மேலும் பெறுமை சேர்க்கும் வகையில் பல களைஞர்கள் பாடல்களை பாடி வருகின்றார்கள். அந்த வகையில், யாழ்ப்பாணத்தமிழன் வாகீசன் ராசையா பற்றி உங்களுக்கு தெரியுமா? தற்போது இவரைப்பற்றி அறியாதவர்கள் […]

உலகம்

இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ட்ரம்ப் உரையாற்றுகையில் இனப்படுகொலை குறித்து கோஷம் எழுப்பப்பட்டதால் பரபரப்பு

  • October 13, 2025
  • 0 Comments

இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் உலகிற்கு அதிக ட்ரம்ப்கள் தேவை என்று எழுந்து நின்று புகழாரம் சூட்டினர். ட்ரம்ப் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் ட்ரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் […]

இலங்கை

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • October 13, 2025
  • 0 Comments

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக  சருமத்தில் சிவத்தல், வியர்வை கொப்புளங்களை ஒத்த சிறிய கொப்புளங்கள் மற்றும் அரிப்பு ஏற்பட்டால் உடனடியாக தோல் மருத்துவரிடம் சிகிச்சை பெறுமாறு கொழும்பு தேசிய மருத்துவமனையின் தோல் மருத்துவர் இந்திரா கஹாவிட்ட  (Indira Kahavita) வலியுறுத்தியுள்ளார். டைனியா வெர்சிகலரால் (Tinea versicolor) பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இவர்களில் கர்ப்பிணித் தாய்மார்களும் கணிசமான அளவில் இருப்பதாக […]

பொழுதுபோக்கு

காந்தாரா சாப்டர்-1 : பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்புகின்றது

  • October 13, 2025
  • 0 Comments

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளா காந்தாரா சாப்டர்-1 திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வசூல் செய்த கன்னட படம் என்கிற சாதனை படைத்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் ‘காந்தாரா’. இந்தப் படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்துக்கு அஜ்னீஷ் லோகேஷ் இசையமைத்தார். ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் இந்தப் படம் உலக அளவில் ரூ.400 கோடிக்கும் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் சுற்றுலா பயணிகளுக்கு வரி விதிக்கப்படுமா? உள்ளுர் கவுன்சிலர்கள் கோரிக்கை!

  • October 13, 2025
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு வரி விதிக்கும் அதிகாரம் தொடர்பில் தற்போது வாத பிரதிவாதங்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரைட்டன் & ஹோவ் கவுன்சிலர் (Brighton & Hove councillor) பெல்லா சாங்கி ( Bella Sankey) உள்ளூர் அதிகாரிகளுக்கு சுற்றுலா வரியை அமல்படுத்த அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். லிவர்பூலில் (Liverpool) நடந்த தொழிலாளர் கட்சி மாநாட்டில் பேசிய அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இந்த அதிகாரங்கள் முதன்மையாக ஒருங்கிணைந்த அதிகாரிகள் அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர்களுக்கு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு – கணினி பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

  • October 13, 2025
  • 0 Comments

மைக்ரோசாப்ட்  (Microsoft) நிறுவனம் தனது விண்டோஸ் 10 (Windows 10) இயக்க முறைமைக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகளை நாளை (14) முதல் முடிவுக்குக் கொண்டுவருவதாக அறிவித்துள்ளது. எனவே, விண்டோஸ் 10 (Windows 10) கணினிகளின் பாதுகாப்பு நாளை முதல் ஆபத்தில் சிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 11 (Windows 11) கணினிகளை இலவசமாகப் புதுப்பிக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இதற்கிடையில், உலகில் 1.4 பில்லியனுக்கும் அதிகமான சாதனங்கள் விண்டோஸைப் (Windows) பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர்களில் 43% […]

உலகம்

புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக 3 ஆராய்ச்சியாளர்களுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 

  • October 13, 2025
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதிக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர்(Joel Mogir), பிலிப் அகியோன்(Philip Achion) மற்றும் பீட்டர் ஹோவிட்( Peter Howitt)ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நோபல் பரிசு தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், […]

இலங்கை

இலங்கையில் நடைபெறும் உலக சுகாதார அமைப்பின் 78 ஆவது பிராந்திய மாநாடு!

  • October 13, 2025
  • 0 Comments

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் 78வது   பிராந்திய மாநாடு இன்று (13) கொழும்பில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த மாநாடு வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறும். இதற்காக WHO இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் (Tedros Adhanom Ghebreyesus)  மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான WHO பிராந்திய இயக்குநர் டாக்டர் கத்தரினா போஹ்மே (Dr. Katharina Boehme) ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். கூடுதலாக, சுகாதார அமைச்சர்கள் மற்றும் இரண்டு தூதர்கள் […]

error: Content is protected !!