இந்தியா செய்தி

கரூரில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் – 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை வழங்கிய விஜய்!

  • October 19, 2025
  • 0 Comments

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த  41 பேரின் குடும்பங்களை விரைவில் சந்திப்பேன் என அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். அத்துடன் முன்னதாக அறிவித்தப்படி 41 குடும்பங்களுக்கும் இழப்பீட்டு தொகையாக 20 இலட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம். நாம் அறிவித்தபடி குடும்பநல […]

இலங்கை

இலங்கை மாகாண சபைத் தேர்தலை குறிவைக்கும் முன்னாள் அமைச்சர்கள்!

  • October 19, 2025
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் 30 இற்கு மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள்  போட்டியிடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேசிய மக்கள் சக்தி அலையை சமாளித்து, தமது கட்சிகளுக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளும் நோக்கிலும், மக்கள் மத்தியில் தமக்குள்ள ஆதரவை நாடிபிடித்து பார்க்கும் வகையிலுமே முன்னாள் அமைச்சர்கள் இவ்வாறு களமிறங்கவுள்ளனர். நவீன் திஸாநாயக்க, உதய கம்மன்பில, ஹிருணிக்கா பிரேமசந்திர, முஷாரப், மருதபாண்டி ராமேஸ்வரன், வடிவேல் சுரேஷ், யோகேஸ்வரன் உட்பட மேலும் பல முன்னாள் […]

உலகம்

போதைப்பொருளுடன் அமெரிக்கா நோக்கி பயணித்த நீர்மூழ்கி கப்பல்!

  • October 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களுடன் பயணித்த நீர்மூழ்கிக் கப்பலை அழிக்க அமெரிக்கா நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump)  தனது ட்ரூத் சோசியல் மீடியா  (Truth Social Media) பக்கத்தில் இட்டுள்ள பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அதில் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் கப்பலில் போதைப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். கப்பலில் நான்கு அறியப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருந்ததாகவும், அவர்களில் இருவர் கடற்படையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட நீர்மூழ்கிக் கப்பல் நிலத்தை அடைந்திருந்தால், […]

உலகம்

சொந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள ஹமாஸ் – அமெரிக்காவின் அறிக்கையால் பரபரப்பு!

  • October 19, 2025
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ளது. இந்நிலையில் காசாவில் (Gaza) வாழும் பாலஸ்தீன மக்கள் மீது உடனடி தாக்குதல்களை நடத்த ஹமாஸ் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் நேற்று அமெரிக்கா வெளியிட்ட ஓர் அறிக்கையில், பாலஸ்தீனியர்களுக்கு (Palestinians) எதிரான திட்டமிடப்பட்ட தாக்குதல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடுமையாக மீறும் செயல் என்றும், மத்தியஸ்த முயற்சிகள் மூலம் அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

நீண்ட காலமாக நிலவிவரும் எல்லைப் பிரச்சினை – போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஆசிய நாடுகள்!

  • October 19, 2025
  • 0 Comments

ஆப்கானிஸ்தானும் (Afghanistan) பாகிஸ்தானும் (Pakistan) போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. கத்தார் (Qatari) மற்றும் துருக்கியின் (Turkey) மத்தியஸ்தத்தில் நேற்று (18) நடைபெற்ற  பேச்சுவார்த்தையில் இவ்விரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக  கத்தார் (Qatari) வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானுக்கும் (Afghanistan),  பாகிஸ்தானுக்கும் (Pakistan) இடையிலான எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த விரிவான கலந்துரையாடலும் இதன்போது  முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நிலவி வரும் எல்லை நெருக்கடி இப்போது மோதல் சூழ்நிலையாக அதிகரித்துள்ளது, மேலும் கடந்த சில […]

ஐரோப்பா

ஸ்பெயினில் கறுப்பு நிற பூனைகளை தத்தெடுப்பதற்கு தடை!

  • October 19, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் (Spani)  கறுப்பு நிறப் பூனைகளைத் தத்தெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெர்ராசாவில் (Terrassa) ஹலோவீன் (Halloween) காலத்தில் இடம்பெறும் தீய நிகழ்வுகளை தடுக்கும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பூனைகளை வளர்ப்பது அல்லது தத்தெடுப்பதற்கான அனைத்து கோரிக்கைகளும் அக்டோபர் 6 முதல் நவம்பர் 10 ஆம் திகதிவரை இடைநிறுத்தப்படும் என  உள்ளூர் விலங்கு நல சேவை தெரிவித்துள்ளது. டெர்ராசா (Terrassa) நகர சபை, நகரத்தில் கறுப்பு  பூனைகள் மீது கொடுமை நடந்ததாக எந்த பதிவும் இல்லை என்றும், […]

இலங்கை

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் 20 மணிநேர நீர் வெட்டு!

  • October 19, 2025
  • 0 Comments

காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை (20) 30 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணி முதல் மறுநாள் (21) பிற்பகல் 2.00 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று வாரியம் ஒரு அறிக்கையை வெளியிட்டது. காலியில் உள்ள ஹப்புகல நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் வழங்கும் பிரதான குழாயில் அத்தியாவசிய பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதன் காரணமாக […]

உலகம்

”இது ஜனநாயகம், முடியாட்சி அல்ல” – ட்ரம்பின் கொள்கைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்!

  • October 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நியூயார்க் (New York), வாஷிங்டன் டி.சி (Washington DC), சிகாகோ (Chicago), மியாமி (Miami) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) உட்பட அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நியூயார்க் நகரத்தின் சின்னமான டைம்ஸ் சதுக்கத்தில் ( New York City’s iconic Times Square) நேற்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான […]

உலகம் செய்தி

அடுத்த வருட தேர்தலில் மீண்டும் பிரதமராக போட்டியிடும் இஸ்ரேலின் நெதன்யாகு

  • October 18, 2025
  • 0 Comments

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) அடுத்த வருட தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் கண்டிப்பாக வெற்றி பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நேர்காணலில் பேசிய நெதன்யாகுவிடம், மீண்டும் ஒரு பதவிக்காலத்தை எதிர்பார்க்க விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு எவ்வித தயக்கமும் இன்றி ஆம் என்று பதிலளித்துள்ளார். இஸ்ரேலின் முக்கிய வலதுசாரிக் கட்சியான லிக்குட்டின் (Likud) தலைவரான நெதன்யாகு, இஸ்ரேலின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய சாதனையைப் படைத்துள்ளார். முதன் முதலில் 1996ம் ஆண்டு பதவியேற்ற நெதன்யாகு 2025 வரை […]

உலகம் செய்தி

வடகிழக்கு பிரேசிலில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழப்பு

  • October 18, 2025
  • 0 Comments

பிரேசிலின் வடகிழக்கில் பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 30 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து பெர்னாம்புகோ (Pernambuco) மாநிலத்தில் விபத்தில் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் பதினொரு பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. விபத்துக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பெடரல் நெடுஞ்சாலை காவல்துறை (Federal Highway Police) தெரிவித்துள்ளது.

error: Content is protected !!