உலகம் செய்தி

வட கொரியா மற்றும் சீனாவின் எல்லை பகுதியில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு

  • October 25, 2025
  • 0 Comments

வட கொரியாவின் எல்லைக்கு அருகில், வடகிழக்கு சீனாவின் ஜிலின் (Jilin) மாகாணத்தின் ஹன்சுன் (Hanshun) நகரில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, உயிரிழப்புகள் அல்லது பொருள் சேதம் குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இல்லை என்று சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதியில் நிலநடுக்கங்கள் அரிதானவை அல்ல, ஏனெனில் முந்தைய ஆண்டுகளில் இதேபோன்ற நிலநடுக்கங்கள் ஜிலின் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பசிபிக் நெருப்பு […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் முதல் சட்டவிரோத எடை இழப்பு மருந்து தொழிற்சாலை சுற்றிவளைப்பு

  • October 25, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சட்டவிரோதமான முறையில் நடைபெற்று வந்த போலி எடை இழப்பு மருந்துகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பின் (MHRA) அதிகாரிகள் நார்தாம்ப்டன்ஷையர் (Northamptonshire) காவல்துறையுடன் இணைந்து நார்தாம்ப்டனில் (Northampton) உள்ள ஒரு தொழிற்சாலையில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் நிரப்ப தயாராக இருந்த பல்லாயிரக்கணக்கான வெற்று எடை இழப்பு தடுப்பூசிகள், மூல இரசாயன பொருட்கள், 2000க்கும் மேற்பட்ட உரிமம் பெறாத ரெட்டாட்ரூடைட் (retradutide) மற்றும் டைர்செபடைட் (dirsepatide) […]

உலகம் செய்தி

ஜார்ஜியாவில் யுரேனியம் வாங்க முயன்ற 3 சீனர்கள் கைது

  • October 25, 2025
  • 0 Comments

ஜார்ஜியாவின் (Georgia) தலைநகரான திபிலிசியில் (Tbilisi) 2 கிலோ (4.4 பவுண்ட்) யுரேனியத்தை வாங்க முயன்றதாகக் கூறப்படும் மூன்று சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது. மேலும், சந்தேக நபர்கள் ரஷ்யா வழியாக சீனாவிற்கு அணுசக்திப் பொருளைக் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக பாதுகாப்பு சேவை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைதுகள் எப்போது நடந்தன அல்லது சந்தேக நபர்களின் அடையாளங்களை பாதுகாப்பு சேவை குறிப்பிடவில்லை. இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படக்கூடிய […]

செய்தி விளையாட்டு

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் அஞ்சல் ஓட்ட போட்டிகளில் தங்கம் வென்ற இலங்கை அணி

  • October 25, 2025
  • 0 Comments

இந்தியாவின் ராஞ்சியில் (Ranchi) நடைபெற்ற 2025ம் ஆண்டிற்கான 4வது தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (South Asian Athletics Championships), ஆண்கள் மற்றும் பெண்கள் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட (Relay) போட்டிகளில் இலங்கை அணி தங்கம் வென்றுள்ளது. இலங்கையின் ஆண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட அணி 39.99 வினாடிகளில் சிறப்பான நேரத்தைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது. அவர்களை தொடர்ந்து, இலங்கையின் பெண்கள் 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்ட அணி 44.70 வினாடிகளில் போட்டியை […]

ஐரோப்பா செய்தி

அயர்லாந்து ஜனாதிபதித் தேர்தலில் கேத்தரின் கோனோலி(Catherine Connolly) அமோக வெற்றி

  • October 25, 2025
  • 0 Comments

இடதுசாரி சுயேச்சை (Left-wing independent) வேட்பாளர் கேத்தரின் கோனொலி (Catherine Connolly) அயர்லாந்து ஜனாதிபதித் தேர்தலில் ஃபைன் கேல் (Fine Gael) கட்சியின் ஹீதர் ஹம்ப்ரியை (Heather Humphrey) வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். வழக்கறிஞரும், சட்டமன்ற உறுப்பினரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிப்படையான விமர்சகருமான 68 வயதான கேத்தரின் கோனொலி 63 சதவீத வாக்குகளை பெற்று வெற்றியாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணைப் பிரதமரும் ஃபைன் கேல் கட்சியின் தலைவருமான சைமன் ஹாரிஸ் (Simon Harris), “கோனொலியின் […]

இந்தியா செய்தி

ராஞ்சியில் தீ பிடித்து எறிந்த பேருந்து – நூலிழையில் உயிர் தப்பிய 40க்கும் மேற்பட்ட பயணிகள்

  • October 25, 2025
  • 0 Comments

ராஞ்சியில் (Ranchi) பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஞ்சி-லோஹர்தகா (Ranchi-Lohardaga) நெடுஞ்சாலையில், ஜார்க்கண்டில் (Jharkhand) இருந்து சத்ராவுக்கு (Chatra) பேருந்து சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. “அதிர்ஷ்டவசமாக, பேருந்து சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று காவல் நிலைய பொறுப்பாளர் மனோஜ் கர்மாலி குறிப்பிட்டுள்ளார். மின்கல அடுக்கு (Battery) பெட்டிக்கு அருகில் ஏற்பட்ட மின் கசிவு […]

உலகம் செய்தி

அமெரிக்காவின் வட கரோலினாவில்(North Carolina) நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் மரணம்

  • October 25, 2025
  • 0 Comments

தென்கிழக்கு வட கரோலினாவில் (North Carolina) ஒரு இரவு விருந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 13 பேர் மீது தாக்குதல் நடந்துள்ளதாகவும் அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் எனவும் ரோப்சன் (Robeson) காவல்துறை அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. தென் கரோலினா எல்லைக்கு அருகிலுள்ள ராலேயிலிருந்து (Raleigh) சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாக்ஸ்டனுக்கு (Maxton) வெளியே உள்ள ஒரு பகுதியில் இந்த […]

இந்தியா செய்தி

இந்தூரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை தகாத முறையில் தொட்ட நபர் கைது

  • October 25, 2025
  • 0 Comments

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தூரில் (Indore) உள்ள ஒரு முக்கிய ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளை பாலியல் ரீதியாக அணுகிய குற்றச்சாட்டில், ஆசாத் (Azad) நகரைச் சேர்ந்த 28 வயது அகீல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வியாழக்கிழமை, இரண்டு வீராங்கனைகளும் தங்கள் ஹோட்டலில் இருந்து வேறொரு ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து வீராங்கனைகள் தங்கள் […]

ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

விலையுயர்ந்த நகைகளை இடமாற்றம் செய்யும் பிரான்சின் லூவர்(Louvre) அருங்காட்சியகம்

  • October 25, 2025
  • 0 Comments

கடந்த வாரம், பிரான்சில் அமைந்துள்ள உலகின் மிகவும் பிரபலமான அருங்காட்சியகத்தில் 102 மில்லியன் டாலர் மதிப்புள்ள 08 நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. மேலும், அதிக பாதுகாப்பு கொண்ட லூவர்(Louvre) அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கொள்ளை வெறும் 07 நிமிடங்களில் அரங்கேற்றப்பட்டுள்ளதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக லூவர் அதன் மிகவும் விலையுயர்ந்த நகைகளில் சிலவற்றை பாங்க் ஆப் பிரான்ஸிற்கு (Bank Of France) மாற்றியுள்ளது. பிரெஞ்சு கிரீட நகைகள் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் இருந்து சில விலைமதிப்பற்ற பொருட்களை ரகசிய […]

உலகம் செய்தி

ட்ரம்ப் – கிம்மின் சந்திப்பு மீண்டும் நிகழுமா?

  • October 25, 2025
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஆசிய பயணத்தின் போது வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார். தனது ஆசிய பயணத்திற்கு புறப்படுவதற்கு முன் ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், தனக்கும் வட கொரிய தலைவருக்கும் மிகவும் நல்ல உறவு இருந்ததாகக் கூறியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. பதவியில் இருந்தபோது […]

error: Content is protected !!